விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியாக உள்ள ‘மெர்சல்’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கதை இப்படி இருக்கும், அப்படி இருக்கும் என்று பலர் ஆரூடம் சொன்னாலும், கதை குறித்து படக்குழுவினர் தரப்பில் இதுவரை எந்த தகவலும் கூறப்படவில்லை.
சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குநர் அட்லி கூட, மெர்சல் கொண்டாட்ட தீபாவளியாக இருக்கும், உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும், என்று சொன்னாரே தவிர படம் குறித்து வேறு எந்த தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில், மெர்சல் படத்தின் கதை இதுதான், என்று கூறி சமூக வலைதளங்களில் கதை ஒன்று உலா வருகிறது.
அதில், ”சென்னையில் மருத்துவராக இருக்கும் விஜய் ஒரு ஆய்வு கூட்டத்தில் கலந்துக்கொள்ள அமெரிக்கா செல்கின்றார்.
அந்த கூட்டத்தில் தன்னை போலவே இருக்கும் மேஜிக் செய்யும் விஜய்யை சந்திக்கின்றார், அவரை பின் தொடர்ந்து மருத்துவர் விஜய் செல்ல, இருவரும் சகோதரர்கள் என்று தெரிய வருகின்றது.
பிறகு பளாஷ்பேக்கில் பஞ்சாயத்து தலைவராக இருக்கும் விஜய்க்கு இரட்டை குழந்தை பிறக்க, அதில் ஒரு குழந்தையை ராஜஸ்தானில் இருக்கும் ஒருவருக்கு கொடுக்கின்றார்.
ஒரு குழந்தையை இவர்கள் வளர்க்க, அப்போது எஸ்.ஜே.சூர்யா அந்த ஊர் கிராம மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஒரு சில வேலைகளை செய்ய, இதை அப்பா விஜய் எதிர்க்கின்றார்.
இதனால், அப்பா விஜய்யை எஸ்.ஜே.சூர்யா கொல்ல, அதை தொடர்ந்து கோவை சரளா ஒரு விஜய்யை தூக்கி சென்று சென்னையில் வளர்க்கின்றார், இந்த உண்மைகளை எல்லாம் தெரிந்துக்கொண்டு இரண்டு விஜய்யும் ஆடும் ருத்ரதாண்டவமே மீதிக்கதை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வைரலாக பரவும் இந்த கதை தான் மெர்சல் படத்தின் கதையா? அல்லது வதந்தியா? என்பது இன்னும் 6 நாட்களில் தெரிந்துவிடும், பார்ப்போம்.
80-களின் முன்னணி கதாநாயகியாகவும், ரசிகர்களின் கனவு கண்ணியாகவும் வலம் வந்த நடிகை அம்பிகா, தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நிலையில், அவரது முகத்தோற்றம் கொண்ட ஒரு நடிகையை கதாநாயகியாக நடிக்க வைக்க படக்குழு ஒன்று முயற்சித்து வருகிறது...
இளம் வயது உலக செஸ் சாம்பியனான குகேஷ், நேற்று நடிகர் சிவகார்த்திகேயனை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்...
’வேற மாரி ஆபிஸ்’, ‘வேற மாறி லைவ் ஸ்டோரி’ தொடர்கள் மற்றும் ‘மால்’, தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்த விஜே பப்பு, ‘ராகவன் : Instinct’ என்ற இணையத் தொடர் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்...