Latest News :

நவீன் சந்திரா, சுனைனா நடிப்பில் உருவாகியுள்ள ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ தொடர் அமேசான் பிரைமில் வெளியாகிறது
Thursday March-14 2024

’திரு திரு துறு துறு’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான நந்தினி.ஜே.எஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இணையத் தொடர் ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’. சுனைனா முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் கண்ணா ரவி, மாலினி ஜீவரத்தினம், ஸ்ரீகிருஷ்ண தயாள், குமரவேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் மிக முக்கியமான சிறப்பு வேடத்தில் நடிகர் நவீன் சந்திரா நடித்திருக்கிறார். 

 

மேக் பிலீவ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுக்தேவ் லஹிரியால் தயாரிப்பில், 10 அத்தியாயங்களாக உருவாகியுள்ள திகில் இணையத் தொடரான ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ வரும் மார்ச் 29 ஆம் தேதி, அமேசான் பிரைமில்  240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

 

மர்மங்களால் சூழப்பட்ட சிக்கலான மற்றும் விசித்திரமான நிகழ்வுகளை எதையும் சந்தேகக் கண்களுடன் அணுகும் ரிஷி நந்தன், என்ற காவல் ஆய்வாளர் ஆராயத் தொடங்கும் போது, அவரது உறுதியான கருத்துக்களுக்கு எதிரான சவால்களை எதிர்கொள்ள நேரும் அவரது பயணத்தின் ஒரு அழுத்தமான கதையை ’இன்ஸ்பெக்டர் ரிஷி’ தொடர் விவரிக்கிறது. மனதை நிலைக்குலையச்செய்யும் இந்த திகில் மற்றும் மர்மம் நிறைந்த வழக்கின் விசாரணையின் ஊடே, குற்றத்தின் மர்ம முடிச்சுக்களை அவிழ்க்கும் முயற்சிகளை மேற்கொள்ளும் போதும் தனது ஆழ்மனதில் பீறிட்டு எழும் உணர்வுகளை கையாளும் போதும் இருநிலைகளிலுமே இன்ஸ்பெக்டர் ரிஷி அச்சமூட்டும் மாபெரும் தடைகளை எதிர்கொள்கிறார்.

 

இத்தொடர் குறித்து கூறிய இயக்குநர் நந்தினி ஜே.எஸ் கூறுகையில், “ஒரு படைப்பாளியாக ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ திரைப்படத்தில் பணிபுரிந்தது ஒரு ஆழ்ந்த மகிழ்ச்சிகாரமான அனுபவமாக இருந்தது. இந்த கூட்டாண்மைக்கு  நான் மிகவும் நன்றி பாராட்டுபவனாக இருக்கிறேன். திகில் மற்றும் மர்மங்களுடன் போலீஸ் நடைமுறைகளை ஒருங்கிணைத்து வழங்கியது, கதை சொல்லல் செயல்பாடுகளில் இன்ஸ்பெக்டர் ரிஷியின் அச்சமூட்டும் விந்தையான உலகத்தினுள் மேலும் ஆழமாக சென்று ஒரு புதிய பரிமாணத்தை ஆராய எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.. நவீன் சந்திரா, சுனைனா, கண்ணா ரவி, மாலினி ஜீவரத்தினம், ஸ்ரீகிருஷ்ண தயாள், குமரவேல் உள்ளிட்ட நடிகர்களின் உன்னதமான நடிப்பும், படக் குழுவினரின் அர்ப்பணிப்புடன் கூடிய முயற்சிகளும் எனது பார்வைக் கோணத்தை திரையில் அழகாக காட்சிப்படுத்த உதவியிருக்கிறது.” என்றார்.

Related News

9593

சோனியா அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள ஹாரார் திரில்லர் ’7G’ ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது!
Tuesday June-25 2024

ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் சார்பில், இயக்குநர் ஹாருன் தயாரித்து, எழுதி,  இயக்க, சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பில், மாறுபட்ட மிரட்டலான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள 7G திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது...

அதர்வா-நிமிஷா சஜயன் நடிக்கும் ’டிஎன்ஏ’ படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது!
Tuesday June-25 2024

ஒலிம்பியா மூவீஸ், மக்களை மகிழ்விக்கும் வகையிலான பல பொழுதுபோக்கு திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது...

’கல்கி 2898 கி.பி’ படத்தின் க்ரோனிக்கிள்ஸ் வீடியோ வெளியானது!
Tuesday June-25 2024

சமீபத்தில் வெளியான டிரெய்லரைத் தொடர்ந்து எட்டுதிக்கும் ’கல்கி 2898 கிபி’ படத்தின் பேச்சாகவே இருக்கிறது...