Latest News :

’ஒத்த ஓட்டு முத்தையா’ படம் மூலம் கவுண்டமணி உருவாக்கிய புதிய கூட்டணி!
Tuesday March-19 2024

கவுண்டமணி - செந்தில் கூட்டணிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் காமெடி கூட்டணி அமையாமல் இருந்த நிலையில், தற்போது கவுண்டமணி புதிய கூட்டணியோடு புதிய உற்சாகத்தோடு மீண்டும் களங்கியிருக்கிறார். ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் மூலம் மீண்டும் கதையின் நாயகனாக களம் இறங்கும் கவுண்டமணியுடன், தற்போதைய காமெடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் யோகி பாபு கூட்டணி அமைத்துள்ளார். இந்த கூட்டணி, கவுண்டமணி - செந்தில் கூட்டணியை மிஞ்சும் அளவுக்கு காமெடியில் கலக்கியிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

இந்த நிலையில், சமீபத்தில் இப்படத்தின் டப்பிங் பணிகளில் கலந்துக்கொண்ட நடிகர் கவுண்டமணி, தொடர்ந்து 8 மணி நேரம் உற்சாகத்துடன் டப்பிங் பேசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். 

 

தற்கால அரசியலை தனக்கே உரிய பாணியில் நையாண்டி செய்யும் வேடத்தில் கவுண்டமணியும் அவருடன் நெருக்கமாக பயணிக்கும் பாத்திரத்தில் யோகி பாபுவும் நடித்துள்ளனர். வுண்டமணிக்கும் யோகி பாபுவுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி மிக நன்றாக அமைந்திருப்பதாகவும் அவர்கள் வரும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை சிரிப்பு மழையில் நனைய வைக்கும் என்றும் இயக்குநர் சாய் ராஜகோபால் தெரிவித்தார். இவரும் இத்திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

ஒட்டு மொத்த குடும்பத்துடன் கண்டு ரசிக்கக் கூடிய வகையில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக், மறைந்த நடிகர் நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஷ், மற்றும் நடிகர் மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, இவர்களுக்கு ஜோடியாக மூன்று இளம் நடிகைகள் நடித்துள்ளனர்.

 

கவுண்டமணி ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்கிறார். மாறுபட்ட ஒரு நகைச்சுவை பாத்திரத்தில் சிங்கமுத்துவும், நல்லதொரு வேடத்தில் சித்ரா லட்சுமணனும் நடிக்கின்றனர். மேலும், மொட்டை ராஜேந்திரன்,  ஓ.ஏ.கே.சுந்தர், ரவிமரியா, வையாபுரி, முத்துக்காளை,  டாக்டர் காயத்ரி, தாரணி, கூல் சுரேஷ், சென்றாயன், லேகா ஶ்ரீ, டி கே ஶ்ரீநிவாசன், சதீஷ் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளம் களம் இறங்கியுள்ளது.

 

Goundamani

 

படம் குறித்து கூறிய இயக்குநர் சாய் ராஜகோபால்,  “சுமார் 70 படங்களில் கவுண்டமணி மற்றும் செந்திலுக்கான நகைச்சுவை பகுதியை எழுதியதோடு, பல்வேறு படங்களில் உதவி, துணை மற்றும் இணை இயக்குநராக நான் பணியாற்றி உள்ளேன். மணிவாசகம், அர்ஜுன், டி பி கஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் பணியாற்றி உள்ளேன். எனது 25 ஆண்டு கால திரையுலக பயணத்தில், பாண்டியராஜன், ஈஸ்வரி ராவ் நடிப்பில் 'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்', 'பாய்ஸ்' மணிகண்டன் மற்றும் சிம்ரன் நடிப்பில் 'கிச்சா வயசு 16' ஆகிய படங்களை இயக்கி உள்ளேன்.

 

'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் கதையை கவுண்டமணி அவர்களிடம் சொன்னபோது மிகவும் மகிழ்ச்சி தெரிவித்ததோடு நடிப்பதற்கும் உடனே சம்மதம் தெரிவித்தார். ஆறு முதல் 60 வரை அனைத்து வயதினரும் ரசிக்கக்கூடிய அரசியல் கலந்த முழுநீள நகைச்சுவை திரைப்படமாக இது இருக்கும். இப்படத்தை ரசிகர்கள் கண்டு மகிழ்ந்து தங்களது பேராதரவை தெரிவிப்பார்கள் என்று நம்புகிறேன்.” என்றார்.

 

சினி கிராஃப்ட் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். ஹெக்டர் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, மகேஷ் நம்பி கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். ராஜா சேதுபதி படத்தொகுப்பு செய்துள்ளார். 

 

தற்போது படத்தின் பின்னணி வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படத்தின் வெளியீட்டு தேடியை படக்குழு அறிவிக்க உள்ளது.

Related News

9607

எல்லைகளைத் தாண்டிய சினிமா அனுபவம்! - கவனம் ஈர்க்கும் 'டாக்ஸிக்' கிளிம்ப்ஸ்
Friday January-10 2025

கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...

பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் ‘தருணம்’!
Thursday January-09 2025

அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...

’G2’-இன் அடுத்த அத்தியாயத்தில் இணைந்த நடிகை வாமிகா கபி!
Thursday January-09 2025

வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும்  ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...

Recent Gallery