இயக்குநர் அருன் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில், சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜனின் பிரமாண்டமான தயாரிப்பில், பொங்கல் பண்டிகை வெளியீடாக ஜனவரி 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘கேப்டன் மில்லர்’ ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதோடு, விமர்சன ரீதியாகவும் பெரும் பாராட்டு பெற்றது.
இந்த நிலையில், அமேசான் ப்ரைம் தளத்தில் கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம், 40 நாட்களை கடந்தும், உலகளவில் 9-க்கும் மேற்பட்ட நாடுகளில் டாப் 5 வரிசையில் இடம் பிடித்து, டிரெண்டிங்கில் புதிய சாதனை படைத்துள்ளது.
வரலாற்றுப் பின்னணியில், ஆங்கிலேயர் காலகட்டத்தில் நடக்கும் கதையை மையப்படுத்திய இப்படத்தில், தனுஷ், பிரியங்கா மோகன் முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க, சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய பாத்திரங்களில் இணைந்து நடித்திருந்தனர்.
’கேப்டன் மில்லர்’ படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படத்திற்கு, மதன் கார்க்கி வசனம் எழுதியுள்ளார்.
பெரும் நட்சத்திரக் கூட்டணியில், உயர்தர தொழில்நுட்ப கலைஞர்களின் கைவண்ணத்தில், வரலாற்றுப் பின்னணியில் அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் வெளிவந்த இப்படம், திரை ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்களைக் குவித்தது.
திரையரங்குகளில் வெற்றி பெற்ற கேப்டன் மில்லர் படம், கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் உலகம் முழுக்க ஸ்ட்ரீம் செய்யப்பட்டது. வெளியான முதல் வாரத்திலேயே, உலகம் முழுக்க 14 நாடுகளில் டாப் 5 வரிசையில் இப்படம் இடம்பிடித்து சாதனை படைத்தது. மேலும் இந்தியா உட்பட 9 நாடுகளில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது.
அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி 40 நாட்களை கடந்த நிலையில், இன்றளவிலும் இந்தியா மட்டுமல்லாது, தான்சேனியா போன்ற ஆப்ரிக்க நாடுகளிலும், மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங் போன்ற ஆசிய நாடுகளிலும், பஹ்ரைன், கத்தார், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், போன்ற நாடுகளிலும் தொடர்ந்து முதல் 5 இடங்களில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.
மேலும், கடந்த 8ஆம் தேதி வெளியான இப்படத்தின் இந்தி பதிப்பு, பல்வேறு புலம்பெயர் நாடுகளில் உள்ள பார்வையாளர்களைக் கவர்ந்த நிலையில், இந்தியாவில் முதல் 10 இடங்களுக்குள் முதல் படமாக இடம் பிடித்ததோடு, தொடர்ந்து 2 வாரமாக, இப்படம் முதல் இடத்தில் உள்ளது. இதுவரை எந்தவொரு இந்தியத் திரைப்படமும் செய்யாத புதிய சாதனை இதுவென்பது குறிப்பிடதக்கது.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...