Latest News :

அடுத்த 2 வருடங்களுக்கான படைப்புகளின் பட்டியலை வெளியிட்ட அமேசான் பிரைம்!
Wednesday March-20 2024

அமேசான் ஒடிடி தளம், அடுத்த இரண்டு வருடங்களில்  ஒளிபரப்பு செய்யப்பட உள்ள தொடர்கள், திரைப்படங்க, நிகழ்ச்சிகள் என சுமார்  70 படைப்புகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 40 ஒரிஜினல் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் மற்றும் இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட 29 திரைப்படங்களுடன் கூடிய இந்தப், புதிய பட்டியல் இந்தியாவின் தலைசிறந்த பொழுது போக்கு நிகழ்ச்சிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி மகிழ்ச்சியில் ஆழ்த்துவதற்கு உத்திரவாதமளிக்கிறது.

 

எதிர் வரவிருக்கும் பிரைம் வீடியோவின் ஒரிஜினல்கள், குடும்பத்திலுள்ள அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரு பரந்த அளவிலான பிரிவு வகைகளின் உள்ளடக்கங்களைக் கொண்ட ஒரு விரிவான எண்ணிக்கையிலான தொடர்கள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது.  விரிவான நீண்ட பட்டியலை வழங்குகிறது. விறுவிறுப்பான த்ரில்லர்கள் மற்றும் மனதை ஆழ்ந்து போகச்செய்யும் டிராமா, விலா எலும்பை நோகச்செய்யும் நகைச்சுவை தொடர்கள், மற்றும் முதுகெலும்பை சில்லிடச்செய்யும் திகில் படங்கள், முதல்  ஆவலைத் தூண்டும் புதிரான கற்பனை கலவாத நிகழ்ச்சிகள், வயது வந்த இளைஞர்களுக்கான கவர்ச்சிகரமான கதைகள், அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த, மற்றும் மனதைக் கவரும் இசையுடன் கூடிய டிராமாக்கள் போன்ற பலதரப்பட்ட வகையிலான இந்தப் பட்டியல் மிகச்சிறந்த உள்ளூர் கதைகளை திரைக்கு கொண்டுவருகிறது. இந்தியாவின் மிகவும் மதிப்பு வாய்ந்த சில திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களால் திரையரங்குகளில் வெளியிடபட்ட பிறகு இந்தச் சேவை மூலமாக அனைத்து மொழிகளிலும் வழங்கப்படும் திரைப்படங்களுக்கும் கூடுதலாக வழங்கப்படுபவை இவை. 

 

“பிரைம் வீடியோவில், எங்கள் கவனம் முழுவதும், ஒரு முழுமையான மிகச்சிறந்த பல்வேறு வடிவத்திலான பொழுதுப்போக்கு அம்சங்களை வழங்கி இந்திய வாடிக்கையாளர்களுக்கு தலைசிறந்த சேவையை அளிப்பதில் நிலைகொண்டுள்ளது. சீரற்றவைகளை முறியடித்து ஒதுக்கித் தள்ளும் ஒரிஜினல் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள், நேரடி சேவை வெளியீடுகள் தொடங்கி அனைத்து மொழிகளிலும் மிகச்சிறந்த மாபெரும் வெற்றி பெற்ற சில திரைப்படங்களின் திரையரங்கு வெளியீட்டுக்கு பிறகான வெளியீடுகள் வரை, அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொழுதுபோக்கிற்கான  முதல் தேர்வாக நாங்கள் திகழவேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள்," என்று, பிரைம் வீடியோ,இந்தியாவிற்கான நிர்வாக இயக்குநர் சுஷாந்த் ஸ்ரீராம் கூறினார். “2023 ஆம் ஆண்டில் நாங்கள் வழங்கிய உள்ளடக்கங்கள் சர்வதேச அமைவிடங்களில் புதிய வாடிக்கையாளர் களை ஏற்றுக்கொள்வதிலும் பிரைம் உறுப்பினர் ஈடுபாடுகளிலும் இந்தியாவை முன்னணியில் திகழச்செய்யும் வகையில் புதிய பாதைகளை வகுத்தமைத்தது. எங்கள் வாடிக்கையாளர்கள் எங்கள் மீது காட்டிய அன்பு எங்களை மேலும் பணிவுறச் செய்தது, மேலும் எங்கள் சேவையில் வழங்கப்படும் ஒவ்வொரு கதையும் யாராவது ஒருவரின் மனதுக்கு விருப்பமான நிகழ்ச்சியாக அல்லது திரைப்படமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இதனுடன் ஒத்திசைந்து செயல்படும் வகையில், இன்று வரையிலான எங்களின் மிகப்பெரிய, மிகவும் பல்வேறு வகைப்பட்ட பட்டியலை   வெளியிடுவதில் நாங்கள் உற்சாகமடைந்துள்ளோம், மற்றும்  நாங்கள் வெளியிடவிருக்கும் தொடர்களும் திரைப்படங்களும் இந்தியாவில் மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை தொடர்ந்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.” 

 

"பிரைம் வீடியோவில், மொழியியல் மற்றும் புவியியல் எல்லைகளுக்கும் அப்பால் பயணிக்கும், ஒரு மாறுபட்ட, உண்மையான மற்றும் இந்தியாவில் வேரூன்றிய  கதைகளை காட்சிப்படுத்துவதற்கான உலகளாவிய மையமாக இருப்பதே எங்களின் தொடர்ந்த  இயக்கச் செயல்பாடாக இருக்கிறது" என்று பிரைம் வீடியோ, இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் ஹெட் ஆப் ஒரிஜினல்ஸ், அபர்ணா புரோஹித் கூறினார். “2023 ஆம் ஆண்டில் மட்டும் மொத்த 52 வாரங்களில் 43 வாரங்களில், எந்தவொரு வார காலத்திலும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் எங்கள் நிகழ்ச்சிகளின் உள்ளடக்கம் கண்டு களிக்கப்பட்டு உலகளவில் பிரைம் வீடியோவில் முதல் 10 இடங்களைப் பெற்று பிரபலமடைந்தது., தேசிய மற்றும் உலகளவில் எங்கள் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை காண்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது, மேலும் இந்திய உள்ளடக்கத்தை உலக அரங்கில் வெற்றி வாகைசூடச் செய்ய எங்களுக்கு மென்மேலும் உத்வேகம் அளிக்கிறது. கதாசிரியர்கள்  மற்றும் திறமையாளர்களுக்கான ஒரு இல்லமாக, இந்திய பொழுதுபோக்குத் துறையைச் சார்ந்த சில சிறந்த திறமையாளர்களின் கூட்டாளியாக இருப்பதில் நாங்கள் மேலும் உற்சாகமடைந்துள்ளோம் மற்றும் புத்தம் புதிய, வலிமையான, மன எழுச்சியை அளிக்கவல்ல மற்றும் பொழுபோக்கு அம்சங்கள் நிறைந்த கதைகளை படைப்பதற்கான ஒரு ஆற்றல்மிக்க, புதிய கருத்துக்களுக்கு அதிகாரமளிக்கிறோம் எதிர் வரவிருக்கும் எங்களின் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் இந்தியாவில் இருந்து அழுத்தமான கதைகள் மென் மேலும் அதிகமான எண்ணிக்கையில் வெளிவர வழி வகுக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.” 

Related News

9615

”’இந்தியன் 2’ படம் 5 வருடம் ஆகக் காரணம் நாங்கள் அல்ல” - கமல்ஹாசன் விளக்கம்
Wednesday June-26 2024

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படம் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!
Wednesday June-26 2024

அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...

சன்னி லியோனுடன் கைகோர்த்த பிரபு தேவா!
Wednesday June-26 2024

எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...