அறிமுக இயக்குநர் அர்ஜூனன்.ஜெ.ஆர் இயக்கத்தில், ஜெயம் ரவியின் நடிப்பில், வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் சார்பில் டாக்டர். ஐசரி கே.கணேஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஜீனி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் ஜெயம் ரவி இடம்பெற்றிருக்கும் இந்த முதல் பார்வை போஸ்டர், படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படம் குறித்து இயக்குநர் அர்ஜூனன் ஜெ.ஆர் கூறுகையில், “ஜெயம் ரவியுடன் இணைந்து பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவருடைய அர்ப்பணிப்பும் ஈடுபாடும் உண்மையிலேயே பாராட்டுக்குரியது. ஸ்கிரிப்ட் விவாதங்கள் ஒரு வாரத்திற்கும் மேல் இருக்கும். ஆனால், படப்பிடிப்பை அரை நாளில் முடித்து விடுவோம். ஒரு சரியான ஷாட்டுக்காக கூடுதலாக உழைக்கும் ஜெயம் ரவியிடம் இருந்து நாங்கள் நிறைய கற்றுக் கொண்டோம்.
குடும்பம் மற்றும் ரிலேஷன்ஷிப்பை மையமாகக் கொண்டு ஆக்ஷன், ஃபன், எமோஷன் போன்ற விஷயங்கள் கலந்து ’ஜீனி' திரைப்படம் உருவாகி இருக்கிறது. மேலும், படம் வலிமையான பெண் கதாபாத்திரங்களை மையமாக கொண்டது. ஒரு தாய், மகள், சகோதரி மற்றும் மனைவியின் உணர்ச்சிகளை சுற்றி படம் இருக்கும். வன்முறை, போதைப்பொருள் மற்றும் இரத்தம் இதெல்லாம் இல்லாமல் மகிழ்ச்சியான ஒரு அனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுப்பது தான் என் நோக்கம். கிட்டத்தட்ட 75% படப்பிடிப்பை முடித்துள்ளோம். இன்னும் 3 பாடல்கள் மட்டுமே உள்ளன. அதோடு படப்பிடிப்பு மொத்தமும் முடிந்து விடும்” என்றார்.
ஜெயம் ரவியுடன் கல்யாணி பிரியதர்ஷன், கீர்த்தி ஷெட்டி, வாமிகா கபி மற்றும் தேவயானி ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பு செய்கிறார். யானிக் பென் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளார். தி புரொடக்ஷன் ஹவுஸ் இந்த படத்தை பிரமாண்டமாகத் தயாரித்துள்ளனர்.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...