கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றதோடு, பத்திரிகையாளர்களிடம் பாராட்டு பெற்ற படங்களில் ஒன்று ‘டைனோசர்ஸ்’. இப்படத்தில் நாயகனாக நடித்த உதய் கார்த்திக், தனது நடிப்பு மூலம் கவனம் ஈர்த்ததோடு, ”தமிழ் சினிமாவில் நிச்சயம் தனக்கென தனி இடத்தை பிடிப்பார்” என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தினார்.
இந்த நிலையில், உதய் கார்த்திக் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘ஃபேமிலி படம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. யு.கே கிரியேஷன்ஸ் சார்பில் கே.பாலாஜி தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் செல்வகுமார் திருமாறன் இயக்குகிறார். இதில் உதய் கார்த்திக் ஜோடியாக சுபிக்ஷா நடிக்கிறார். இவர்களுடன் விவேக் பிரசன்னா, பார்த்திபன், ஶ்ரீஜா, சந்தோஷ், மோகன சுந்தரம், ஆர்ஜே பிரியங்கா, ஜனனி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
ஒரு குடும்பத்தில் இருக்கும் மூன்று அண்ணன் தம்பிகள், வாழ்வில் ஜெயிக்க போராடுகிறார்கள், அவர்களுக்குள் நிகழும் சண்டைகள், காதல், காமெடி என அனைத்தும் கலந்த ஒரு அழகான குடும்பத்தின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் அழகான உனர்வுப்பூர்வமான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு எளிமையான பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியது.
மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அனிவீ இசையமைக்கிறார். கே.பி.நந்து கலை இயக்குநராக பணியாற்ற, ஆர்.சுதர்ஷன் படத்தொகுப்பு செய்கிறார்.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...