இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், ராம்சரண் நடிப்பில் உருவாக இருக்கும் பிரமாண்டமான காவியத் திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்பட வெற்றியின் மூலம் உலகளவில் பிரபலமடைந்திருக்கும் நடிகர் ராம்சரணும், ‘புஷ்பா’ திரைப்படத்தின் வெற்றியின் மூலம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் சுகுமாரும் இணைந்திருப்பது ரசிகர்களிடம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர்கள் இருவரும் இணையும் திரைப்படத்தின் தயாரிப்பு பணிகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. பெயரிடப்படாத இந்த திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் பிரம்மாண்டமாக வெளியிடுவதை இலக்காகக் கொண்டிருக்கிறது.
'ரங்கஸ்தலம்' படத்தின் வெற்றிக்குப் பிறகு ராம்சரண் - சுகுமார் -மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் இசையமைப்பாளர் டிஎஸ்பி கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது.
இந்தத் திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...