’சித்தி’ தொலைக்காட்சி தொடர் மூலம் நடிகராக அறிமுகமான டேனியல் பாலாஜி, சூர்யாவின் ‘காக்க காக்க’ படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நடிகராக அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து கமல்ஹாசனின் ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் வித்தியாசமான நடிப்பின் மூலம் மிரட்டியவர், தொடர்ந்து பல படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடம் பிடித்தார்.
இந்த நிலையில், நடிகர் டேனியல் பாலாஜிக்கு நேற்று திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார்.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...