Latest News :

‘ஸ்மோக்’ இணையத் தொடரில் முக்கிய வேடத்தில் நடிக்கும் சோனா!
Saturday March-30 2024

கவர்ச்சி நடிகை சோனா தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக கொண்டு இணையத் தொடர் ஒன்றை தயாரித்து இயக்கி வருகிறார். ஷார்ட் பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாக இருக்கும் இந்த இணையத் தொடருக்கு ‘ஸ்மோக்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

 

பல பாகங்களாக வெளியாக இருக்கும் ‘ஸ்மோக்’ பாகம் ஒன்றின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில், இந்த இணையத் தொடரில் நடிகை சோனா தனது கதாபாத்திரத்தில் தானே நடிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். சோனாவின் வெவ்வேறு வயதிலான காலகட்டங்களில் அவரது கதாபாத்திரமாக நடிக்கும் ஆதினி (5 வயதில்), ஜனனி (14 வயதில்) மற்றும் ஆஸ்தா அபய் (30 வயதில்) ஆகியோரின் கதாபாத்திர போஸ்டர்கள் சமீபத்தில் தயாரிப்பு நிறுவனத்தால் வெளியிடப்பட்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், 30 வயதுக்கு மேற்பட்ட கதாபாத்திரத்தில் நடிகை சோனாவே நடிக்க இருக்கும் தகவலை தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ளது.

 

இது குறித்து நடிகை சோனா கூறுகையில், ”புகை படர்ந்த கனவுகள் நிறைந்த வாழ்க்கையில், என்னவென்றே தெரியாத இடங்களுக்கோ அல்லது சூழல்களுக்கோ வாழ்க்கை எங்கே என்னை அழைத்து செல்லும் நிலையில் சரியாக என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை. என்னுடைய கதையை சொல்வதால், கேட்கப்பட்ட கேள்விகள் அல்லது மறந்துபோன கேள்விகள், ஒளிந்துள்ள உண்மைகள் அல்லது சொல்லப்படாத உண்மைகள் குறித்து இதை இயக்கியுள்ளதுடன் அதில் அனைத்திலும் ஒரு பாகமாகவும்  இருந்தேன். என் வாழ்க்கைக்குள் வந்து என்னை பாருங்கள்” என்றார்.

 

யுனிக் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகை சோனா தயாரித்து இயக்கி நடிக்கும் ‘ஸ்மோக்’ இணையத் தொடர் கோடைக்காலத்தில் வெளியாக உள்ளது.

Related News

9634

சோனியா அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள ஹாரார் திரில்லர் ’7G’ ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது!
Tuesday June-25 2024

ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் சார்பில், இயக்குநர் ஹாருன் தயாரித்து, எழுதி,  இயக்க, சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பில், மாறுபட்ட மிரட்டலான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள 7G திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது...

அதர்வா-நிமிஷா சஜயன் நடிக்கும் ’டிஎன்ஏ’ படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது!
Tuesday June-25 2024

ஒலிம்பியா மூவீஸ், மக்களை மகிழ்விக்கும் வகையிலான பல பொழுதுபோக்கு திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது...

’கல்கி 2898 கி.பி’ படத்தின் க்ரோனிக்கிள்ஸ் வீடியோ வெளியானது!
Tuesday June-25 2024

சமீபத்தில் வெளியான டிரெய்லரைத் தொடர்ந்து எட்டுதிக்கும் ’கல்கி 2898 கிபி’ படத்தின் பேச்சாகவே இருக்கிறது...