போக்கஸ் ஸ்டுடியோஸ் சார்பில் விநாயக் துரை தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘வல்லவன் வகுத்ததடா’. ஹைப்பர் லிங்க் பாணியிலான திரைக்கதையில் க்ரைம் டிராமாவாக உருவாகியிருக்கும் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக இப்படத்தின் கதைக்களத்தை விளக்கும் விதமாக வெளியிடப்பட்ட டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் டிரைலரை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் இசையமைப்பாளர் ஜிப்ரான் வெளியிட்டுள்ளனர்.
5 கதாபாத்திரங்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள், பரபரப்பான திருப்பங்களுடன் ஹைப்பர்லிங்க் திரைக்கதையில் சொல்லும், க்ரைம் டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது. இந்த டிரெய்லர் 5 கதாபாத்திரங்களின் பின்னணியை காட்டுவதுடன், பணத்திற்காக அவர்களின் உணர்ச்சிகரமான போராட்டத்தை பரபரப்பாகக் காட்டுகிறது.
பணம் தான் உலகின் மனித வாழ்வை தீர்மானிக்கிறது. பணம் இருப்பவனுக்கும் இல்லாதவனுக்கும் இடையில் நடக்கும் போராட்த்தை பரபர திருப்பங்களுடன் சொல்லும் இப்படத்தில் தேஜ் சரண்ராஜ் நாயகனாக நடித்துள்ளார். ராஜேஷ், பாலச்சந்திரன், அனன்யா மணி, ஸ்வாதி மீனாக்ஷி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், பட வெளியீட்டுக்கான இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சகிஷ்னா சேவியர் இசையமைத்துள்ளார். அஜய் படத்தொகுப்பு செய்ய, மகேஷ் மேத்யூ சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...