நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘தசரா’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, நானியின் திரைப்படங்களில் அதிக வசூல் ஈட்டிய திரைப்படமாக அமைந்த நிலையில், தசரா இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலாவுடன் நடிகர் நானி மீண்டும் இணைந்துள்ளார்.
நானியின் 33 வது திரைப்படமாக உருவாக இருக்கும் இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. தற்காலிகமாக ‘நானி 33’ என்று அழைக்கப்படும் இப்படத்தை ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரிக்கிறார்.
தசரா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஸ்ரீகாந்த் ஒடேலா, முதல் படத்திலேயே அதிக வசூலை குவித்து நல்ல வரவேற்பை பெற்றார். தனது முதல் படத்திலேயே நானியை இதுவரை யாரும் பார்த்திராத அளவுக்கு வித்தியாசமாக வெளிப்படுத்தியிருந்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக நானியுடன் வித்தியாசமான முயற்சியை மேற்கொள்ள இருக்கிறார், என்பதை படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளிப்படுத்துகிறது.
புதிய படம் தொடர்பாக வெளியிடப்பட்ட போஸ்டரில் ரத்தம் தெறிக்க சிவப்பு நிறம் கொண்டிருக்கிறது. இதன் பின்னணியில் நானியின் முகம் மாசாக காட்சியளிக்கிறது. இத்துடன் அவர் சிகரெட் பிடிக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான போஸ்டரில், ”தலைவராக இருக்க அடையாளம் தேவையில்லை” என்ற வாசகம் இடம்பெற்று இருக்கிறது.
இதன் மூலம், இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா, மீண்டும் நானியை அதிரடி ஆக்ஷன் மற்றும் பலம் வாய்ந்த கதாபாத்திரமாக உருவாக்க ரெடியாகிவிட்டார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இந்த போஸ்டர், சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
இந்த படம் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...