சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி மக்களின் மனதில் இடம் பிடித்த ஆடம்ஸ், திரைப்படம் இயக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், நான்கு வருடங்களாக உதவி இயக்குநர், இணை இயக்குநராக பணியாற்றியவர் தற்போது ‘கேன்’ (can) என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
ஷோபனா கிரியேஷன்ஸ் சார்பில் டி.கருணாநிதி தயாரிக்கும் இப்படத்தில் பிரணவி மனுகொண்டா, ஹேமந்த் மேனன், அக்ஷரா ராஜ் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, கலையரசன், யாஷிகா ஆனந்த், தம்பி ராமையா, ரோபோ சங்கர், கோவை சரளா, கருணாகரன், மாறன், ஸ்ரீமன், VTV கணேஷ், கௌசல்யா, ரெடின் கிங்ஸ்லி, நாஞ்சில் விஜயன், கார்த்திக் கருப்பு காளை, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி, இன்றைய தலைமுறையின் காதலைப் பெண்களின் பார்வையில் அழுத்தமாகவும், ஆழமாகவும் சொல்லும் இயக்குநர் ஆடம்ஸ், அதை நகைச்சுவையுடன் கூடிய கமர்சியல் கதைக்களத்தோடு கொடுத்திருக்கிறார்.
இப்படம் தொடர்பான விளம்பர வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வந்த நிலையில், இன்று படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் கதாபாத்திரங்களை கலைத்துப் போட்டு, ஒரு புதிய முகத்தை உருவாக்கிக் காட்டியிருக்கும், இந்த புதுமையான முதல் பார்வை போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருப்பதோடு, படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
முழுக்க முழுக்க ஊட்டில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பின்னணி வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் டீசர், டிரைலர் மற்றும் இசை வெளியீடு குறித்த தகவலை படக்குழு அறிவிக்க உள்ளது.
ஆடம்ஸ் எழுதி இயக்கும் இப்படத்திற்கு அஸ்வமித்ரா இசையமைக்க, பிரகாஷ் ருத்ரா ஒளிப்பதிவு செய்கிறார். மதன்.ஜி படத்தொகுப்பு செய்ய, என்.கே.ராகுல் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். ஸ்ரீதர் நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...