இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, அதன் இரண்டாம் பாகமான ‘புஷ்பா : தி ரூல்’ படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்திய அளவில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களின் வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் ‘புஷ்பா : தி ரூல்’ படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மிக பிரமாண்டமான முறையில் தயாரித்திருக்கிறது.
வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ‘புஷ்பா : தி ரூல்’ வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்று படத்தின் டீசர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, நடிகர் அல்லு அர்ஜூனின் பிறந்தநாளான ஏப்ரல் 8 ஆம் தேதி ‘புஷ்பா : தி ரூல்’ படத்தின் டீசர் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த பான்-இந்திய படத்தின் சீக்வல் மூலம் வெள்ளித்திரையில் மீண்டும் ஆதிக்கம் செலுத்த உள்ளார் அல்லு அர்ஜுன். தெலுங்கு சினிமாவில் மட்டுமல்லாது, இந்திய சினிமாவிலும் இந்த 'புஷ்பா: தி ரூல்' படம் முக்கியமான ஒன்று. நடிகர் ஃபஹத் ஃபாசில் பழிவாங்கும் வஞ்சம் கொண்ட கதபாத்திரம் மூலம் இந்த சீக்வலிலும் அல்லு அர்ஜூனுடன் இணைகிறார்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், மிர்ஸ்லோ குபா ப்ரோஸெக் ஒளிப்பதிவில், எஸ்.ராமகிருஷ்ணா மற்றும் என்.மோனிகாவின் தயாரிப்பு வடிவமைப்பில் உருவாகியிருக்கும் ‘புஷ்பா : தி ரூல்’ சினிமா ரசிகர்களுக்கான மிகப்பெரிய விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...