Latest News :

”ஜிவி பிரகாஷுக்கு நடந்தது, எனக்கும் நடந்தது” - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday April-05 2024

இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக ஜோடியாக நடித்திருக்கும் படம் ‘டியர்’. நட்மெக் புரொடக்‌ஷன்ஸ்  (Nutmeg Productions) நிறுவனம் சார்பில் வருண் திருபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி மற்றும் ஜி.பிருத்விராஜ் ஆகியோர் தயாரித்திருக்கும் இப்படம் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இன்று படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

 

இதில் கலந்துக்கொண்ட படத்தின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் படம் குறித்து கூறுகையில், ”இந்த வருடம் ஜீவிக்கு நடந்தது, கடந்த வருடம் எனக்கும் நடந்தது, என்னையும் வெள்ளிக்கிழமை நாயகி எனக் கூப்பிட்டுள்ளார்கள். அதன் காரணங்கள் எனக்குத் தெரியும். கள்வன் படத்திற்காக ஜீவிக்கு வாழ்த்துக்கள். டியர் படம் எனக்கு மிகவும் நெருக்கமான படம். எல்லோருமே மிகவும் பிடித்து, விரும்பி நடித்த படம். ஜெகதீஷ் மாதிரி கேமராமேன் எனக்கு எல்லாப்படத்திலும் கிடைத்தால் நன்றாக இருக்கும். என்னை அவ்வளவு அழகாகக் காட்டியுள்ளார். இந்தப்படம் ஷீட்டிங்கே ஒரு கொண்டாட்டமாக இருந்தது. ரோகிணி மேடம் பகிர்ந்துகொள்வதைக் கேட்பதே வரம் தான். எல்லோருடன் பழகியது மிகச்சிறந்த அனுபவம். இந்தப்படம் மூலம் ஆனந்த் நண்பராகக் கிடைத்துள்ளார். இந்தப்படம் எனக்கு மூன்று வருடப் பயணம். ஆனந்த் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம். வருண்! தமிழ் சினிமாவிற்கு நல்ல தயாரிப்பாளர் கிடைத்துள்ளார். அவருடன் இன்னொரு படமும் செய்துள்ளேன் விரைவில் திரைக்கு வரும். எங்கள் படத்தின் நாயகன் தூண் ஜீவி தான். நல்ல நண்பர், அவரைப்பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது.  எனக்காகக் கதை கேட்டு நடித்ததற்கு நன்றி. இந்தப்படம் கண்டிப்பாக ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.” என்றார்.    

 

படத்தின் நாயகன் ஜி.வி.பிரகாஷ் குமார் பேசுகையில், “நவாராவாராம் படம் வருதே எனக் கேட்கிறார்கள் ஆனால் இது 4 வருடமாக உழைத்து உருவான படங்கள், ஆனால் அது அனைத்து வேலைகளும் முடித்து, இப்போது வருகிறது. டியர் திரைப்படம் ஐஸு ஃபிளைட்டில் என்னைப்பார்த்து இந்தக்கதை கேளுங்கள் என்றார். இவர் படத்தில் நமக்கு என்ன ரோல் இருக்கும் எனத் தயங்கினேன், ஆனால் கதை கேட்டவுடன் அழுது விட்டேன், மிகவும் பிடித்திருந்தது. உடனே நடிக்க ஒத்துக்கொண்டேன். லைவ் சவுண்ட் என்பதால் எல்லோரும் போட்டிப் போட்டு நடித்துள்ளோம். எல்லோரும் அருமையாக நடித்துள்ளனர். வருணுக்கு என் வாழ்த்துக்கள். படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.” என்றார்.

 

இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் பேசுகையில், “2020 ஏப்ரலில் என் முதல் படம் ஓடிடியில் வெளியானது. இங்கிருக்கும் பத்திரிக்கையாளர்கள் தந்த ஆதரவால் தான் நான் வெளியே கொஞ்சம் தெரிந்தேன். அதற்காக அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தின்  ஐடியா வந்த போது நரேனிடம் சொன்னேன் அவர் மூலமாகத் தான் வருணிடம் கதை சொன்னேன். அவர் படங்களே பார்த்ததே இல்லை எப்படிப் புரிந்து கொள்வார் எனத் தயக்கம்  இருந்தது, ஆனால் அவருக்குப் பிடித்தது உடனே தயாரிக்கலாம் என்றார். அவருக்குப் பிடித்தால் அதைப் பற்றி முழுதாக தெரிந்து கொண்டு ஆர்வமுடன் செய்வார். பல ஐடியாக்கள் தந்தார். கோபி பிரசன்னா அழகாக டிசைன் செய்து தந்தார். கார்த்திக் நேத்தா அருமையான வரிகள் தந்தார்.  ஜெகதீஷ் என் குறும்படத்தில் வேலை பார்த்த காலத்தில் கிம்பல் வைத்து ஒரே ஷாட்டில் ஒரு படம் எடுத்தோம் அப்போது ஆரம்பித்த பயணம், என் முதல் படத்திற்கே அவரைத்தான் கேட்டேன். இந்தப்படத்தில் அவர் விஷுவல் தான் ஞாபகம் வரும். ஐஸ்வர்யாவை அழகாகக் காட்டியுள்ளார். எனக்கு பர்ஸனலாக டப்பிங் பிடிக்காது அதனால் தான் லைவ் சவுண்ட்.  சின்ன சின்ன சவுண்ட் கூட ஷீட்டிங்கில் சிக்கலாகி விடும்.   திரும்பத் திரும்ப எடுக்க வேண்டி வரும் ஆனாலும் லைவ் சவுண்ட் பேசப்படும். நல்ல பெர்ஃபார்ம் பண்ணுகிற ஆர்டிஸ்டால் தான் முடியும் அதனால் தேடித் தேடி நடிகர்களைத் தேர்வு செய்தேன். ரோகிணி மேடம் ஏற்கனவே லைவ் சவுண்டில் வேலை பார்த்திருக்கிறார். அவர் ஒரு இயக்குநர், இப்படத்திலும் பல காட்சிகளில் அசத்தியிருக்கிறார்.  தலைவாசல் விஜய் சார் நல்ல ரோல் செய்துள்ளார். காளி அண்ணா நல்ல மெத்தட் ஆக்டர்,  அருமையாக நடித்துள்ளார். ஐஸ்வர்யாவிடம் தான் முதலில் கதை சொன்னேன் அவர் வீட்டுக்குப் போன போது 60 அவார்ட் இருந்தது. அதைப்பார்த்தால் நல்ல கதை இருந்தால் மட்டும் வா என்பது போல் இருக்கும். மிக எளிமையாகப் பழகுவார். திரைக்கதையிலும்  அவர் பங்களிப்பு அதிகம். படத்தின் கிளைமாக்ஸில் ஒரு சீன் வரும் அது அவர் ஐடியா தான். தயாரிப்பாளருக்குப் பிடித்த நடிகை. ஜீவியிடம் ஐஸ்வர்யா தான் ஃபிளைட்டில் பார்த்து கால்ஷீட் வாங்கித் தந்தார். ஜீவி நோ தான் சொல்வார் என நினைத்தேன் ஆனால் அவர் கதை நல்லாருக்கு நடிக்கிறேன் எனச் சொல்லிவிட்டார். அவர் இசை எனக்கு ரொம்பப் பிடிக்கும். நடிக்கும் போது கதைகள் கேட்பார், மியூசிக் போடுவார், இந்திப்படம் நடிக்கிறார், தயாரிக்கிறார் அவரைப்பார்த்தாலே பிரமிப்பாக இருக்கிறது. ஒவ்வொரு ஷாட்டிலும் பெட்டராக நடிக்க முயற்சிப்பார். இப்படம் அவரோட பெஸ்ட்டாக இருக்கும். இது ஒரு ரிலேஷன்ஷிப் டிராமா உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். ஏப்ரல் 11 திரையரங்குகளில் வருகிறது ஆதரவு தாருங்கள்.” என்றார்.

 

தயாரிப்பாளர் வருண் திரிபுரனேனி பேசுகையில், “நரேனுக்கு நன்றி. அவரால் தான் திரைத்துறைக்குள் வந்தேன். ஆனந்த் கதை சொன்ன போதே மிகவும் பிடித்திருந்தது. அவர் சிறந்த படத்தைத் தந்துள்ளார் அவருடன் படம் செய்தது பெருமையாக உள்ளது. ஜீவி, ஐஸ்வர்யா, ரோகிணி, இளவரசு உட்பட அனைவருக்கும் நன்றி. இரண்டு பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தையும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என நம்புகிறேன். உழைத்த கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத்  தாருங்கள்.” என்றார்.

 

Dear Movie Press Meet

 

நடிகர் அப்துல் லீ பேசுகையில், “ஒரு ரகசியம் சொல்றேன் ஜீவிக்கு 4 குளோன் இருக்கு,  ஒண்ணு  மியூசிக் போடுது, ஒண்ணு நடிக்கப்போகுது.  இதை ஐஸ்வர்யா ராஜேஷிடம் சொன்னால் அவர் நானே குளோன் தான், ஒரிஜனல் ஐஸ்வர்யா சுழல் நடிக்கப் போயிருக்கிறார் என்றார். அவ்வளவு பிஸியான நடிகர்கள் என்றாலும்  இப்படத்தில் இருவரும்  நல்ல ஒத்துழைப்பு தந்தார்கள். என்னை இப்படத்தில் நல்ல முறையில் பயன்படுத்திய இயக்குநருக்கு நன்றி. கேப்டன் மில்லர் படத்திற்காக என்னைப் பாராட்டிய அனைத்து பத்திரிக்கை நண்பர்களுக்கும் நன்றி. இப்படம் கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்.” என்றார்.

 

நடிகை ரோகிணி பேசுகையில், “விருமாண்டி படத்திற்குப் பிறகு லைவ் சவுண்டில் இந்தப்படம் செய்துள்ளேன். மிகப்பெரிய மெனக்கெடல் இருந்தால் தான் இதைச் செய்ய முடியும். அதில் பிடிவாதமாக இருந்த இயக்குநருக்கு வாழ்த்துக்கள். லைவ் சவுண்ட் எப்படி வந்திருக்கிறது என்பதைப் பார்க்கும் போது தான் அதன் அருமை தெரிகிறது. ஜீவி அருமையான நடிகர். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவர் இசையமைத்த படங்களும் வருவதால், வெள்ளிக்கிழமை நாயகன் என்கிறார்கள், அவரிடம் எப்படி இவ்வளவு வேலைகளைப் பார்க்கிறீர்கள் என்று கேட்டேன், என்னுடைய எல்லா வேலைகளையும் உடனுக்குடன் செய்துவிடுவேன் என்றார். அவருக்கு என் வாழ்த்துக்கள். ஐஸ்வர்யா ராஜேஷ் மிகச் சிறந்த நடிகை, நல்ல நடிப்பைத் தந்துள்ளார். இளவரசு நன்றாக நடித்துள்ளார். ஒரு அருமையான படைப்பு உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.” என்றார்.

 

ஒளிப்பதிவாளர்  ஜெகதீஷ் பேசுகையில், “ஆனந்த்துடன் இணைந்த பயணம் குறும்பட காலத்தில் ஆரம்பித்தது. இன்னும் நிறையப் பயணப்பட வேண்டும் என ஆசைப்படுகிறேன் நன்றி. ஜீவி பிரகாஷுக்கு ஒளிப்பதிவு தெரியும் என்ன லென்ஸ் போடுகிறோம் என்பது முதல் அவருக்குத் தெரிகிறது, எங்குப் படிக்கிறார் என்று தெரியவில்லை, ஜீவி, ஐஸ்வர்யா இருவரையும் அழகாகக் காட்டியுள்ளேன் என நம்புகிறேன். நம் வீடுகளில் உள்ள பிரச்சனைகளை எளிமையாகக் கையாண்டிருக்கிற படம் ஆனந்த்தின் கதை வித்தியாசமாக இருக்கும். குறட்டை ஆண் பெண் இருவருக்கும் பொதுவானது.” என்றார். 

 

நடிகர் இளவரசு பேசுகையில், “பொதுவாக இயக்குநருக்குள் ஒரு நீதிபதி பார்வை தான் இருக்கும் ஆனால் ஆனந்த் வித்தியாசமானவர். எதற்கு அப்பா எனத் தெரியாமல் நிறைய அப்பா கேரக்டர் பணத்திற்காகச் செய்துள்ளேன் ஆனால் இந்தக்கதாபாத்திரம் வித்தியாசமாக இருந்தது. ஆண் பெண் இருவருக்கும் இடையில் சின்ன சின்ன பிஹேவரியில் ஏற்படும் பிரச்சனை, எங்குக் கொண்டு செல்லும் என்பதை முதிர்ச்சியாகக் கையாண்டுள்ளார் இயக்குநர். இப்படிப்பட்ட அருமையான படத்தைத் தயாரிக்க முன்வந்த  தயாரிப்பாளருக்கு  என் வாழ்த்துக்கள். மிக முக்கியமான விசயத்தை இப்படம் பேசியுள்ளது. பத்திரிக்கையாளர்கள் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள். ஜீவியுடன் முறைத்துக் கொள்வது போல் ஒரு பாத்திரம், நன்றாக வந்துள்ளது. கலைஞர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.” என்றார்.

 

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ருகேஷ் படத்தொகுப்பு செய்ய, பிரகதீஸ்வரன் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். அனுஷா மீனாட்சி ஆடை வடிவமைப்பாளராக பணியாற்ற, அறிவு, ஏகாதசி, ஜிகேபி, விண்ணுலக கவி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

 

பல வெற்றி படங்களை விநியோகம் செய்து வரும் ரோமியோ பிக்சர்ஸ் ‘டியர்’ படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ள குறிப்பிடத்தக்கது.

Related News

9652

எல்லைகளைத் தாண்டிய சினிமா அனுபவம்! - கவனம் ஈர்க்கும் 'டாக்ஸிக்' கிளிம்ப்ஸ்
Friday January-10 2025

கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...

பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் ‘தருணம்’!
Thursday January-09 2025

அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...

’G2’-இன் அடுத்த அத்தியாயத்தில் இணைந்த நடிகை வாமிகா கபி!
Thursday January-09 2025

வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும்  ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...

Recent Gallery