Latest News :

’கல்கி 2898 AD’ படத்தின் சிறப்பு அனிமேஷன் வீடியோவுக்கு குரல் கொடுத்த பிரபாஸ்!
Saturday April-06 2024

நாக் அஸ்வின் இயக்கத்தில், பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட முன்னணி இந்திய நட்சத்திரங்கள் நடிப்பில், வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகும் சயின்ஸ் பிக்சன் திரைப்படமான ’கல்கி 2891 AD’ கடந்த ஆண்டு சாண்டியாகோ காமிக்-கான் நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டு உலகளவில் பெரும் அலைகளை உருவாக்கியதுடன், பெரும் பாராட்டுகளையும் பெற்றது.

 

தற்போது ’கல்கி 2891 AD’ படத்தின் வெளியீட்டுக்கு பார்வையாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் நிலையில், படம் பற்றி அவ்வபோது வெளியாகும் தகவல்கள் படத்தின் மீது நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

இந்த நிலையில், தற்போது இந்த பிரமாண்ட படைப்பிலிருந்து, ஒரு அற்புதமான அப்டேட்டை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். அதாவது, ‘கல்கி 2898 AD’ உலகத்தைப் பற்றிய ஒரு பார்வையை அறிமுகப்படுத்தும் வகையில், இப்படத்தின் அனிமேஷன் அறிமுக வீடியோ ஒன்று ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த வீடியோவிற்கு நட்சத்திர நடிகர் பிரபாஸ் டப்பிங் செய்துள்ளார்.

 

பொழுதுபோக்கு செய்தி நிறுவனமான பிங்க்வில்லா தளத்தில் கூறியுள்ள தகவலின் படி, வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில்,  இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில் ‘கல்கி 2898 AD.’  படத்தின் சிறப்பு அனிமேஷன் அறிமுக வீடியோவை வெளியிடவுள்ளனர், இது பார்வையாளர்களுக்கு நாக் அஸ்வினின் சயின்ஸ் பிக்சன் உலகம் குறித்து ஒரு அறிமுகத்தை வழங்கும். இந்த முழு அனிமேஷன் வீடியோவிற்கும் முன்னணி நட்சத்திர நடிகர் பிரபாஸ் குரல் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிமுக வீடியோவின் டிஜிட்டல் பிரீமியரில், ‘கல்கி 2898 AD’ படத்தில் நட்சத்திர நடிகர்கள் பங்குபெறும் கதாபாத்திரங்களையும் இந்த வீடியோ அறிமுகப்படுத்தும்.

 

இந்த அனிமேஷன் அறிமுக வீடியோவின்   உரிமையை கைப்பற்ற ஸ்ட்ரீமிங் தளங்கள் பெரும்  முதலீட்டைச் செய்துள்ளதாக இந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது படத்தின் திரையரங்கு வெளியீட்டிற்கு முன்னதான உலகளாவிய பிரீமியரைக் குறிப்பதாக அமைந்துள்ளது. ஒரு பிரபல நட்சத்திர நடிகர் இதுபோன்ற அனிமேஷன் அறிமுக வீடியோவிற்கு, குரல் கொடுப்பது இதுவே முதல் முறை என்பதால், இந்த அப்டேட் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘கல்கி 2898 AD’ திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ஒவ்வொரு அப்டேட்டிலும் வானளாவ உயர்ந்து வருகிறது.  

Related News

9657

எல்லைகளைத் தாண்டிய சினிமா அனுபவம்! - கவனம் ஈர்க்கும் 'டாக்ஸிக்' கிளிம்ப்ஸ்
Friday January-10 2025

கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...

பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் ‘தருணம்’!
Thursday January-09 2025

அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...

’G2’-இன் அடுத்த அத்தியாயத்தில் இணைந்த நடிகை வாமிகா கபி!
Thursday January-09 2025

வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும்  ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...

Recent Gallery