இசையமைப்பாளராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடம் பிடித்திருக்கும் விஜய் ஆண்டனி, திரையுலக வியாபாரத்திலும் முக்கிய நபராக வலம் வருகிறார். தற்போதைய சினிமாவில் கதை தான் கதாநாயகன், என்று மேடைகளில் பலர் பேசினாலும், ரசிகர்களின் பேவரைட் ஹீரோக்களின் படங்கள் தான் வசூல் ரீதியாக வெற்றி பெற்று வருகிறது. அப்படிப்பட்ட ஹீரோக்களின் பட்டியலில் ஒருவராக வலம் வரும் விஜய் ஆண்டனியின் படங்கள் அனைத்தும் வியாபார ரீதியாக தொடர்ந்து வெற்றி பெற்று வருவதால், ரசிகர்களிடம் மட்டும் இன்றி திரையரங்க உரிமையாளர்களிடமும் விஜய் ஆண்டனி படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், விஜய் ஆண்டனி நடிப்பில் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாக உள்ள ‘ரோமியோ’ படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருப்பதோடு, அப்படம் குறித்து விஜய் ஆண்டனி சொன்னது விரைவில் நடக்கப் போகிறது, என்று அப்படத்தை பார்த்தவர்கள் பேசி வருகிறார்கள்.
’பிச்சைக்காரன் 2’ படம் தொடங்கியது முதலே ’பிளாக்பஸ்டர் ஹிட்’ என்ற வாசகத்துடன் விளம்பரம் செய்யப்பட்டது. விஜய் ஆண்டனியின் இந்த அதீத தன்னம்பிக்கை வியப்பை ஏற்படுத்தினாலும், படம் வெளியாகி அவர் கணித்தது போலவே பிளாக்பஸ்டர் ஹிட்டானது.
தற்போது ‘ரோமியோ’ படத்தை துவங்கும் போதும் ‘பிளாக்பஸ்டர் லவ் ஸ்டோரி’ என்ற வாசகத்துடன் தான் விஜய் ஆண்டனி விளம்பரம் செய்து வருகிறார். இந்த முறையும் அவர் கணித்தது பளிக்குமா? என்ற கேள்வி எழ, தற்போது அதற்கு விடை கிடைத்திருக்கிறது.
ஆம், வியாபரம் தொடர்பாக ‘ரோமியோ’ படத்தை பார்த்த பலர், படம் மிக சிறப்பாக வந்திருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். அதுமட்டும் அல்ல, விஜய் ஆண்டனி இதுவரை நடித்திராத வித்தியாசமான வேடத்தில் மாஸாகவும், கலகலப்பாகவும் நடித்திருக்கிறாராம். இதனால் படம் இளஞர்களை மட்டும் இன்றி அனைத்து தரப்பினரையும் கவரும் ஜாலியாக இருப்பதாகவும், நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
ஆக, விஜய் ஆண்டனி சொன்னது இந்த முறையும் நடக்கப் போகிறது.
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கியிருக்கிறார்.
விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மிருணாளினி நடிக்க, விடிவி கணேஷ், யோகி பாபு, இளவரசு, தலைவாசல் விஜய், சுதா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கிறார்கள்.
இபப்டத்தை தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிருவனம் வெளியிடுகிறது.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...