‘மைனா’, ‘கும்கி’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’, ‘ரோமியோ ஜூலியட்’, ‘ அண்ணாத்த’, ‘விஸ்வாசம்’ என தொடர்ந்து பல வெற்றி படங்களுக்கு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து வரும் இசையமைப்பாளர் டி.இமான், கிராமத்து இசை, மெலோடி, குத்துப்பாட்டு என அனைத்து வகைகளிலும் கலக்கி வருகிறார்.
தமிழ் இசை உலகில் ரசிகர்களின் பாடல் பிளே லிஸ்ட்டில் நீங்காத இடம் பிடித்திருக்கும் டி.இமானின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகி வரும் நிலையில், கோபுரம் பிலிம்ஸ் ஜி.என்.அன்புச்செழியன் தயாரிப்பில், சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் ‘இங்க நான்தான் கிங்கு’ படத்தில் இடம்பெறும் “மாயோனே செல்ல மாயோனே...” என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இணையம், சமூக வலைதளங்கள் என பல தளங்களில் இப்பாடல் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருவதோடு, நீண்ட நாட்களுக்குப் பிறகு பெண்களை கவர்ந்த பாடலாகவும் அமைந்திருக்கிறது.
மேலும், நகரம் முதல் கிராமம் வரை அனைத்து இடங்களிலும் மக்களை முணுமுணுக்க வைக்கும் இந்த பாடலுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பால் இசையமைப்பாளர் டி.இமான், தயாரிப்பாளர் ஜி.என்.அன்புச்செழியன், நாயகன் சந்தானம் ஆகியோர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஒரு படம் வெளியாகும் முன்பாகவே அப்படத்தின் பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றால், அந்த படம் நிச்சயம் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைக்கும் என்பது தமிழ் சினிமாவின் செண்டிமெண்ட் என்பதால், தற்போது ‘இங்க நான்தான் கிங்கு’ என்ற படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...