சமூக வலைதளம் மூலம் பிரபலமான மிருணாளினி ரவி, தற்போது கதாநாயகியாக மட்டும் அல்லாமல் கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய நடிகையாகவும் வலம் வருகிறார். கதை தேர்வில் கவனம் செலுத்துபவர், நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் வகையிலான கதாபாத்திரங்களை தொடர்ந்து தேர்ந்தெடுத்து வருகிறார்.
அந்த வகையில், விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள ‘ரோமியோ’ படத்தில் நாயகியாக மிருணாளினி நடித்திருக்கிறார். இப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, அதற்கு முன்பாக வெளியான போஸ்டரில் மிருணாளினி ரவி மது பாட்டிலுடன் இருப்பதும், அதை பார்த்து மிரண்டு போகும் விதத்தில் இருக்கும் விஜய் ஆண்டனி கையில் பால் சொம்பு இருப்பது போன்றும் இருந்த புகைப்படமே, இது நாயகன் மற்றும் நாயகி இருவருக்கும் முக்கியத்தும் உள்ள படம் என்பதை புரிய வைத்துவிட்டது.
இந்த நிலையில், ‘ரோமியோ’ படத்தை பார்த்த பலர் படம் சிறப்பாக வந்திருப்பதாக சொல்வதோடு, விஜய் ஆண்டனியின் வித்தியாசமான நடிப்பு மற்றும் மிருணாளினியின் உடனான கெமிஸ்ட்ரி ஆகியவற்றை குறிப்பிட்டு பாராட்டி வருகிறார்கள். இதனால், ரசிகர்களிடம் மட்டும் இன்றி திரையுலகினரிடமும் இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
படத்தில் நடித்தது குறித்து கூறிய நடிகை மிருணாளினி ரவி, “சில கதாபாத்திரங்கள் நடிப்பதற்கு எளிதாகவும் அதேசமயம் சவாலாகவும் இருக்கும். ‘ரோமியோ’வில் எனது கதாபாத்திரம் இதுபோன்றது தான். என்னுடைய நிஜ கதாபாத்திரம் இந்தப் படத்தின் கதாபாத்திரத்திற்கு அப்படியே மாறுபட்டது. பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் பொழுதுபோக்கு அனுபவத்தை இந்தப் படம் நிச்சயம் கொடுக்கும். இயக்குநர் விநாயக் வைத்தியானந்தன் என்னிடம் கதையை சொன்னபோது சுவாரஸ்யமாகவும் வலுவான எமோஷனல் அடித்தளமும் இதில் இருக்கிறது என்பது புரிந்தது.
கூடுதலாக, திறமையான நடிகர் விஜய் ஆண்டனி சாருடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். ஆரம்பத்தில் தலைவாசல் விஜய், விடிவி கணேஷ், யோகி பாபு மற்றும் பல அனுபவமிக்க நடிகர்களுடன் பணியாற்றப் போகிறேன் என்பது பதட்டமாக இருந்தது. ஆனால், படப்பிடிப்பில் அவர்களிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் நிறைய இருக்கிறது. ’ரோமியோ’ ஒரு மகிழ்ச்சியான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம். இது அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும்” என்றார்.
அறிமுக இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார். யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், சுதா, ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் நாளை (ஏப்ரல் 11) உலகம் முழுவதும் வெளியாகிறது.
இப்படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிருவனம் வெளியிடுகிறது.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...