Latest News :

’ரோமியோ’ படத்திற்கு கிடைத்த மாபெரும் ஓபனிங்! - மகிழ்ச்சியில் விஜய் ஆண்டனி
Saturday April-13 2024

இசையமைப்பாளராக ரசிகர்களை கவர்ந்த விஜய் ஆண்டனி, தற்போது நடிகராக ரசிகர்கள் விரும்பும் படங்களை கொடுத்து நாயகனாகவும் தனக்கென்று தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார். நடிகராக மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும் இருப்பதால், கதை தேர்வில் கவனம் செலுத்துபவரின் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘ரோமியோ’ திரைப்படம் இளசுகளை மட்டும் இன்றி குடும்பத்தினரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

 

ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியான ‘ரோமியோ’ திரைப்படத்திற்கு மிகப்பெரிய ஓபனிங் கிடைத்திருப்பதாலும், பெண்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருப்பதாலும், விஜய் ஆண்டனி மகிழ்ச்சியடைந்துள்ளார்.

 

தனது ‘ரோமியோ’ அனுபவம் குறித்து நடிகர் விஜய் ஆண்டனி கூறுகையில், “விநாயக் கதையை என்னிடம் சொல்லி முடித்தவுடன் அதன் ஆழம் மற்றும் அதில் இருந்த உணர்வுப்பூர்வமான விஷயங்கள் என்னை கவர்ந்தன. எண்டர்டெயின்மெண்ட் மற்றும் எமோஷனல் கலந்த கதையாக உருவாகியுள்ள 'ரோமியோ' இன்றைய இளைஞர்களை நிச்சயம் கவரும் என நான் நம்பினேன். ரொமாண்டிக் காமெடி கதைகள் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் வரவேற்பு பெற்ற ஜானர். இந்த படமும் அப்படி ரசிகர்களுக்குப் பிடிக்கும். தான் சொன்னதை திரையில் கொண்டு வர வேண்டும் என முழு அர்ப்பணிப்போடு விநாயக் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் வேலை பார்த்தார்.

 

மிருணாளினி ரவியுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியான அனுபவம். மிகவும் அர்ப்பணிப்புள்ள நடிகை. எப்படிப்பட்ட சவாலான காட்சி கொடுத்தாலும் திறமையாக நடித்துவிடுவார். ஒட்டு மொத்த குழுவும் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி. மதிப்பிற்குரிய தலைவாசல் விஜய் சாருடன் பணிபுரிந்தது எனக்குக் கிடைத்த பாக்கியம். 'ரோமியோ' படத்தை அனைத்து வயதினரும் கொண்டாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.” என்றார்.

 

’ரோமியோ' படத்தை விநாயக் வைத்தியநாதன் எழுதி இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார். முதன்மை கதாபாத்திரங்களில் விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி நடித்துள்ளனர். இவர்களுடன் யோகி பாபு,  விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், சுதா, மற்றும் ஸ்ரீஜா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு பரத் தனசேகர் இசையமைத்திருக்க, ஃபரூக் ஜே பாஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Related News

9670

திரைப்படத்தின் இசை மற்றும் பாடல்கள் யாருக்கு சொந்தம்? - விளக்கம் அளிக்கும் KRIA Law-வின் குழு விவாதம்!
Friday February-28 2025

திரைப்படங்களில் இடம்பெறும் பாடல்கள் படம் வெளியீட்டுக்குப் பிறகு அதன் மூலம் கிடைக்கும் வருமானம் யாருக்கு சொந்தம்? என்பது குறித்த சர்ச்சை தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாக பேசுப்பொருளாகியுள்ளது...

வாழ்வின் இரண்டாவது வாய்ப்பின் அருமையை பேசும் ’செகண்ட் சான்ஸ்’ வீடியோ பாடல்!
Friday February-28 2025

கவிப்பேரரசு வைரமுத்து  வரிகளில், ஸ்ரீ பி இசையில், கலைமாமணி ஶ்ரீதர் மாஸ்டர் நடன அமைப்பில், ஜிவி பிரகாஷ் குமார், நரேஷ் ஐயர் மற்றும் ரக்‌ஷிதா குரல்களில் A Spot Light Entertainment தயாரிப்பில் சபரி மணிகண்டன் இயக்கத்தில், வாழ்வில் இரண்டாவது வாய்ப்பின் அருமையை பேசும் அழகான ஆல்பம் பாடலாக உருவாகியுள்ளது ’செகண்ட் சான்ஸ்’...

தனுஷின் ‘குபேரா’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Friday February-28 2025

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் ஜிம் சர்ப் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குபேரா’...

Recent Gallery