Latest News :

துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ பட டீசர் வெளியானது!
Saturday April-13 2024

துல்கர் சல்மான் பல்வேறு மொழிகளில் தனது அழுத்தமான நடிப்பின் மூலம், தான் பல மொழி நட்சத்திரம் என்பதை நிரூபித்துள்ளார். ’மகாநடி’ மற்றும் ’சீதா ராமம்’ போன்ற பிளாக்பஸ்டர் படங்களின் மூலம் தெலுங்கு திரையுலக ரசிகர்கள் மத்தியிலும் தனி அன்பைப் பெற்றுள்ளார். அவர் வரவிருக்கும் தனது பல மொழி திரைப்படமான ’லக்கி பாஸ்கர்’ படத்திற்காக புகழ்பெற்ற இயக்குநர் வெங்கி அட்லூரியுடன் இணைந்துள்ளார்.

 

’லக்கி பாஸ்கர்’ படத்தில், துல்கர் ஒரு எளிய பேங்க் கேஷியராக நடித்துள்ளார். இதுவரை பார்த்திராத தோற்றத்தில் இந்தப் படத்தில் அவரைப் பார்க்க முடிகிறது. ‘லக்கி பாஸ்கர்’ படக்குழு ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் வகையில் படத்தின் டீசரை ஏப்ரல் 11 தேதியன்று வெளியிட்டது.

 

அதிர்ஷ்டத்தையும் பணத்தையும் பெறுவதற்கான பாஸ்கரின் அசாதாரண பயணத்தை இந்த டீசர் காட்டுகிறது. இதில் இடம்பெற்றுள்ள துல்கர் பேசும் வசனம், "ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நபர் செலவைக் குறைத்து சிக்கனமான வாழ்க்கையை நடத்துவதன் மூலம் தனது சேமிப்பை அதிகரிக்க முடியும். அதுவே போட்டி என்று வந்துவிட்டால் ஒத்த ரூபாயைக் கூட மிச்சம் வைக்காமல் செலவு செய்வோம்" என்கிறார். அவர் ஏன் விசாரிக்கப்படுகிறார்? அவர் எப்படி இவ்வளவு பெரிய தொகையை சம்பாதித்தார்? இந்த கேள்விகள் இடம்பெற்றுள்ள இந்த டீசர் படம் மீது ரசிகர்களுக்கான ஆர்வத்தை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.

 

இந்தப் படத்தை பிளாக்பஸ்டர் எழுத்தாளரும் இயக்கநருமான வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். அவரது முந்தைய படமான ‘சார்/வாத்தி’ சமூகப் பொறுப்புடன் கூடிய பிளாக்பஸ்டர் பொழுதுபோக்கு படமாக விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது. இப்படத்தில் துல்கருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். அவர் சமீபத்தில் மகேஷ் பாபு நடித்த ’குண்டூர் காரம்’ படத்தில் நடித்து பிரபலமானார்.

 

சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் சூர்யதேவரா நாக வம்சியும், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் சாய் சௌஜன்யாவும் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் இப்படத்தை வழங்குகிறது. ’லக்கி பாஸ்கர்’ படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். தயாரிப்பு வடிவமைப்பு பக்காளன் மற்றும் நவின் நூலி படத்தொகுப்பாளர். ஜிவி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் மற்றும் டீசரில் அவரது பின்னணி இசை சிறந்த அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது.

 

‘லக்கி பாஸ்கர்’ தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. படம் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும்.

Related News

9671

பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் ‘தருணம்’!
Thursday January-09 2025

அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...

’G2’-இன் அடுத்த அத்தியாயத்தில் இணைந்த நடிகை வாமிகா கபி!
Thursday January-09 2025

வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும்  ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...

ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘கிங்ஸ்டன்’ படத்தின் முதல் பார்வை வெளியானது!
Thursday January-09 2025

தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...

Recent Gallery