அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில், தமன்குமார் நாயகனாக நடிக்கும் படம் ‘ஒரு நொடி’. பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், பாஃப்டா திரைப்படக் கல்லூரி நிறுவனரும், ‘காற்றின் மொழி’, ‘இவன் தந்திரன்’, ‘கோடியில் ஒருவன்’, ‘கொலைகாரன்’ போன்ற படங்களை வெளியிட்ட விநியோகஸ்தருமான தனஞ்செயன் இப்படத்தை முன்னின்று வழங்குகிறார். மதுரை அழகர் மூவிஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் நிருவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் ‘ஒரு நொடி’ படத்தில் தமன்குமார் நாயகனாக நடிக்க, அவருடன் எம்.எஸ். பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ கருப்பையா, கஜராஜா, தீபா ஷங்கர், ஸ்ரீரஞ்சனி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். கே.ஜி.ரத்தீஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சஞ்சய் மாணிக்கம் இசையமைத்திருக்கிறார். எஸ்.குரு சூர்யா படத்தொகுப்பு செய்ய, எஸ்.ஜே.ராம் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
கடந்த சில நாட்களாக ‘ஒரு நொடி’ படம் தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இப்படத்தின் விளம்பர பணியை வித்தியாசமான முறையில் செய்து ரசிகர்களின் கவனத்தை படக்குழு ஈர்த்துள்ளது.
’ஒரு நொடி’ படத்தின் டீசரை நடிகர் ஆர்யா நேற்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட அதே சமயத்தில், படத்தின் டிரைலர் தமிழ்நாடு முழுக்க 150 திரையரங்குகளில் வெளியானது. ஒரு திரைப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் இரண்டு வெவ்வேறு தளங்களில் ஒரே நேரத்தில் வெளியிடுவது இதுவே முதல் முறையாகும். இப்படி செய்வதன் ஆன்லைன் ரசிகர்கள் மற்றும் திரையரங்க ரசிகர்கள் என இரு தரப்பினர் இடையும் படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல் படத்திலேயே முத்திரை பதிக்க விரும்பும் இயக்குநர், ஆர்வமும் நேர்மையும் மிக்க புதிய தயாரிப்பாளர், வளர்ந்து வரும் இளம் நடிகர் பட்டாளம் என்று ஆர்வம் மிக்க இந்தக் கூட்டணி 'ஒரு நொடி' படத்தின் மூலம் திகில் மற்றும் மர்மம் நிறைந்த சஸ்பென்ஸ் கதை ஒன்றை புதிய கோணத்தில் சொல்லக் காத்திருக்கிறது. ரசிகர்கள் யூகிக்க முடியாத மர்ம முடிச்சுகள் படத்தின் இன்னொரு பலம்.
'ஒரு நொடி' படத்தின் போஸ்ட் புரடக்ஷன் பணிகள் முழுமையடைந்து, சென்சார் சான்றிதழ்காக காத்திருக்கிறது. இந்த படம் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இப்படத்தை சென்னை மற்றும் செங்கல்பட்டில் பி.வி.ஆர். சினிமாஸ் நிறுவனமும், கோயபத்தூரில் திருப்பூர் சுப்ரமணியமும், வெளிநாடுகளில் டென்ட்கொட்டா நிறுவனமும் வெளியிடுகின்றனர். இப்படத்தின் ஆடியோ வெளியீடு மற்றும் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியிட இருக்கிறார்கள்.
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...