கடந்த ஜனவரி 12 ஆம் தேதி வெளியான பான் இந்தியா திரைப்படமான ‘ஹனுமன்’ மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், அப்படத்தின் நாயகன் தேஜா சஜ்ஜாவை சூப்பர் ஹீரோவாக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இதற்கிடையே, நடிகர் தேஜா சஜ்ஜாவின் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், தற்போது அவர் நடிக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குநர் கார்த்திக் கட்டம்நேனியுடன் கைகோர்த்திருக்கும் தேஜா சஜ்ஜா நடிக்கும் புதிய படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பில் டிஜி விஸ்வ பிரசாத் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளார்.
இன்னும் தலைப்பு வைக்காத இந்த படத்தின் அறிவிப்புக்காக வெளியிடப்பட்ட போஸ்டரில் சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா, முகத்தில் தீவிரமான பாவனையுடன் மிடுக்காக தோற்றமளிக்கிறார். அவரது முந்தைய படத்தில் பாரம்பரிய தோற்றத்தில் காட்சியளித்த தேஜா சஜ்ஜா முற்றிலும் புதிய ஸ்டைலான தோற்றத்திற்கு மாறி சூப்பர் யோதாவாக அசத்துகிறார். இப்படத்தின் தலைப்பு ஏப்ரல் 18 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
ஈகிள் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு கார்த்திக் கட்டம்நேனி மற்றும் பீப்பிள் மீடியா ஃபேக்டரி இணையும் இரண்டாவது திரைப்படம் இதுவாகும், ஈகிள் படம் போலவே இப்படமும் புதிய வரலாறு படைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு அற்புதமான திரைக்கதை வல்லுநரான கார்த்திக் கட்டம்நேனி, இது சூப்பர் யோதாவின் சாகசக் கதையில், தேஜா சஜ்ஜாவை பிரம்மாண்டமாக காட்டவுள்ளார்.
இந்திய அளவில் மிகச்சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றவுள்ளதால், படம் உலகளாவிய தரத்துடன் பிரம்மாண்ட படைப்பாக இருக்கும்.
படத்தின் மற்ற விவரங்களும் தலைப்பு வெளியாகும் அன்றே அறிவிக்கப்படும். தேஜா உடைய கடைசிப் படம் ப்ளாக்பஸ்டர் வெற்றியை குவித்ததால், அவரது அடுத்த படத்திற்காக நாடு முழுவதும் ஆவலுடன் காத்திருக்கிறது.
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...