இயக்குநர் கிரிஷ் ஏ.டி இயக்கத்தில், நஸ்லென் மற்றும் மமிதா பைஜூ முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான ‘பிரேமலு’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. மலையாளத்தில் மட்டும் இன்றி, தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான இப்படம் தமிழக ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வியாபார ரீதியாக மட்டும் இன்றி விமர்சன ரீதியாகவும் பாராட்டு பெற்றது.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இப்படத்திற்கு ஓடிடி தளத்திலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.
கிரிஷ் ஏ.டி மற்றும் கிரண் ஜோசி இணைந்து எழுதியுள்ள இப்படத்திற்கு அஜ்மல் சாபு ஒளிப்பதிவு செய்ய, விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார். ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் படத்தொகுப்பு செய்துள்ளார். பாவனா ஸ்டுடியோஸ் சார்பில் ஃபஹத் பாசில், திலீஷ் போத்தன், சியாம் புஷ்கரன் ஆகியோர் தயாரித்து
கிரீஷ் A D மற்றும் கிரண் ஜோசி இணைந்து எழுதியுள்ள இப்படத்திற்கு அஜ்மல் சாபு ஒளிப்பதிவு செய்துள்ளார், விஷ்ணு விஜய் இசையமைக்க, ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். பாவனா ஸ்டுடியோஸ் சார்பில் ஃபஹத் பாசில், திலீஷ் போத்தன், சியாம் புஷ்கரன் ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
நஸ்லென், மமிதா பைஜூ முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, சங்கீத் பிரதாப், அகிலா பார்கவன், ஷியாம் மோகன், மீனாட்சி ரவீந்திரன், அல்தாஃப் சலீம், ஷமீர் கான், கே.எஸ்.பிரசாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
முழுக்க முழுக்க காதல் கதையாக இருந்தாலும், இளைஞர்கள் மட்டும் இன்றி பெரியவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய ஜாலியான திரைப்படமாக திரையரங்குகளில் கொண்டாடப்பட்ட ‘பிரேமலு’ ஓடிடி தளத்தில் மிகப்பெரிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...