தமிழ் சினிமாவில் சிறுவர்களுக்கான படம் மற்றும் ஆன்மீகம் பேசும் திரைப்படங்கள் வெளியாவது அரிதாகிவிட்ட நிலையில், அப்படிப்பட்ட படங்கள் வெளியானாலும் அவை அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய கமர்ஷியல் அம்சங்கள் இல்லாமல் வெளியாவதால் மக்களிடம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால், பிற மொழிகளில் அதுபோன்ற படங்கள் வெளியாகி தமிழ்நாட்டிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்த வகையில், ‘காந்தாரா’, ‘ஹனுமன்’ போன்ற படங்கள் இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஆன்மீக திரைப்படங்களாகவும், சிறுவர்களுக்கான ஃபேண்டஸி கமர்ஷியல் படங்களாகவும் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், ‘காந்தாரா’, ‘ஹனுமன்’ போன்ற படங்களைப் போல் தமிழ் சினிமாவில் திரைப்படங்கள் வெளியாவதில்லையே!, என்ற ரசிகர்களின் ஏக்கத்தை போக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ரூபன்’. ஐயப்ப சாமியைப் பற்றி பேசும் ஆன்மீகத்திரைப்படமாக இப்படம் உருவாகியிருந்தாலும், பல்வேறு ஃபேண்டஸி மற்றும் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த படமாகவும் உருவாகியிருக்கிறது.
ஏ.கே.ஆர் பியூச்சர் பிலிம்ஸ் சார்பில் ஆறுமுகம், இளங்கார்த்திகேயன் ராஜா இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை ஐயப்பன் இயக்கியுள்ளார். விஜய் பிரசாத் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் காயத்ரி ரெமா நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் சார்லி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கிறார்கள்.
வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இபப்டத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் மோகன்.ஜி, கணேஷ் கே.பாபு, நடிகர் சார்லி உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஐயப்பன் படம் குறித்து கூறுகையில், “இந்த படம் கண்டிப்பா ஒரு கமர்ஷியல் கலந்த படமா இருக்கும். இது ஒரு சாமி படம் என்று எல்லாரும் பதிவு பண்றதால கண்டிப்பா இது அப்படி கிடையாது, நீங்க சமீபத்துல காந்தாரா, அனுமான் போன்ற படங்கள் வரிசையில் கண்டிப்பா இந்த படம் இடம் பிடிக்கும். நல்ல கமர்ஷியல் விசயங்களைக் கொண்ட ஒரு ஆன்மீக படமாக இதை நனக்க எடுத்திருக்கோம். இந்த தயாரிப்பாளர்கள் ரொம்ப ரொம்ப எங்களுக்கு சப்போர்ட் பண்ண விதம் பெரிய விஷயம்.ஒரு பெரிய சேலஞ்ச் என்னன்னா சினிமாவுல ஒரு சின்ன பட்ஜெட் குடுத்துட்டு அதுல ஒரு பெரிய விஷுவல் காட்டறது என்பது ஒரு சவாலான விஷயம், நான் அந்த பெரிய விஷுவல் பண்றதுக்கு நான் படிச்ச நாவல் எனக்கு என்ன சொல்றேன் கேமரா மட்டும் குடு எனக்கு அது போதும் அப்படி எல்லா இடத்திலும் சொல்லுவாங்க, ஏன்னா அது ஒன்னு தான் நான் பேசுற ஆயுதமா எல்லா இடத்திலும் பார்க்கப்படுது அதனால் அந்த ஆயுதத்தை என்கிட்ட கொடுத்துட்டாங்க நான் ஓடிட்டே இருந்தேன் அதனால இந்த தயாரிப்பாளர்களுக்கு மிகவும் நன்றி.” என்றார்.
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...