Latest News :

சரிகமா நிறுவனத்தின் புதிய தமிழ் ஆல்பம் பாடல் ’எண்டே ஓமனே’!
Friday April-19 2024

திரை இசை மற்றும் சுயாதீன இசைத்துறையில் முன்னணி நிறுவனமான சரிகமா தயாரிப்பில், எஸ்.கணேஷ் இசையில் உருவாகியுள்ள இசை ஆல்பம் ’எண்டே ஓமனே...’.  விக்னேஷ் ராமகிருஷ்ணன் எழுதியிருக்கும் இந்த பாடல் வீடியோவை கார்த்திக் ஸ்ரீ இயக்கியிருக்கிறார். 

 

சக்திஸ்ரீ கோபாலன், ஹர்ஷவர்தன் ஆகியோர் குரலில் இளைஞர்களை கொள்ளை கொள்ளும் காதல் பாடலாக உருவாகியுள்ள இப்பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.

 

’கனா’ படப்புகழ் தர்ஷன், மலையாள இளம் நடிகை அஞ்சு குரியன் நடிப்பில், பெரும் பொருட்செலவில்,  கேரள திருமண வீட்டின் கொண்டாட்ட  பின்னணியில், வண்ணங்கள் பொழியும் அற்புத விஷுவல்களுடன், மனதை மயக்கும் மெலடியில் இப்பாடல் உருவாகியுள்ளது.

 

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் திரைப்பட பாடலுக்கு நிகராக, அட்டகாசமான உருவாக்கத்தில், மனதை கொள்ளை கொள்ளும் இந்தப்பாடல் வெளியான வேகத்தில், இணையம் முழுக்க பெரும் வரவேற்பைப் பெற்று, வைரலாகி வருகிறது. மேலும் அனைத்து இசைத் தளங்களிலும் சார்ட்பஸ்டர் லிஸ்டிலும் இடம்பிடித்து வருகிறது.

 

கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்பாடலுக்கு அஸார் நடனம் அமைத்துள்ளார். கிஷோர். ஆர் கலை இயக்குநராக பணியாற்ற, ஆஷிஷ் ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார். பிரவீன் ராஜா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

 

Related News

9691

வாழ்வின் இரண்டாவது வாய்ப்பின் அருமையை பேசும் ’செகண்ட் சான்ஸ்’ வீடியோ பாடல்!
Friday February-28 2025

கவிப்பேரரசு வைரமுத்து  வரிகளில், ஸ்ரீ பி இசையில், கலைமாமணி ஶ்ரீதர் மாஸ்டர் நடன அமைப்பில், ஜிவி பிரகாஷ் குமார், நரேஷ் ஐயர் மற்றும் ரக்‌ஷிதா குரல்களில் A Spot Light Entertainment தயாரிப்பில் சபரி மணிகண்டன் இயக்கத்தில், வாழ்வில் இரண்டாவது வாய்ப்பின் அருமையை பேசும் அழகான ஆல்பம் பாடலாக உருவாகியுள்ளது ’செகண்ட் சான்ஸ்’...

தனுஷின் ‘குபேரா’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Friday February-28 2025

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் ஜிம் சர்ப் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குபேரா’...

இரண்டு நிறுவனங்களின் இணைப்பால் திரைத்துறையில் ஏற்பட உள்ள புதிய புரட்சி!
Friday February-28 2025

உலகளாவிய நிறுவனமான SRAM & MRAM குழுமம் மற்றும் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனமான Paradigm Pictures AD Ltd ஆகியவற்றுக்கு இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க இணைப்பு,  மதிப்புமிக்க வாரன் ஹவுஸில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் வெளியிடப்பட்டது...

Recent Gallery