இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி பிலஸ் ஹாட்ஸ்டார் தனது புதிய இணையத் தொடருக்கு ‘உப்பு புளி காரம்’ என்று தலைப்பு வைத்துள்ளது. இதில், பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஷ்வினி, தீபிகா, கிருஷ்ணா, ஃபரினா, ராஜ் ஐயப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நவீன தலைமுறையின் காதல் மற்றும் உறவுகள் பற்றிய கதையுடன், அட்டகாசமான பொழுதுபோக்கு இணையத் தொடராக உருவாகியுள்ள ’உப்பு புளி காரம்’ இளைஞர்களுக்கான செம விருந்தாக அமையும்.
விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரித்துள்ள இத்தொடரை எம்.ரமேஷ் பாராதி இயக்கியுள்ளார். ஷேக் இசையமைக்க, பார்த்திபன் மற்றும் சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் சமீபத்திய வெளியீடான ‘ஹார் பீட்’, ‘மத்தகம்’, ‘லேபிள்’ இணையத் தொடர்கள் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அந்த வரிசையில் இந்த ‘உப்பு புளி காரம்’ தொடரும் நிச்சயம் மக்களை கவரும் என்று தயாரிப்பு தரப்பு நம்பிக்கை தெரிவித்து, தொடரின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளது.
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...