இந்திய திரையுலகின் முன்னணி சண்டைப்பயிற்சி இயக்குநராக வலம் வரும் அனல் அரசு, பல மொழித்திரைபப்டங்களில், சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றி வருவதோடு, பல முன்னணி ஹீரோக்களின் பேவரைட் சண்டைப்பயிற்சி இயக்குநராகவும் திகழ்கிறார்.
மிகப்பெரிய சண்டைக்காட்சிகளை படமாக்கும் போது அதில் நடிக்கும் நட்சத்திரங்களுக்கு எந்தவித பாதிப்பும் அதே சமயம் கடினத்தையும் கொடுக்காமல் மிக சாதாரணமாக காட்சிப்படுத்தக் கூடிய திறன் படைத்த அனல் அரசு, அந்த சண்டைக்காட்சிகளை திரையில் பிரமிக்க வகையில் காட்டுவதில் வல்லவர், அதனால் தான் இந்திய அளவில் முன்னணி நட்சத்திரங்கள் பலர் அனல் அரசுவின் சண்டைப்பயிற்சியை விரும்புகிறார்கள்.
இவர் ஏற்கனவே பணியாற்றிய திரைப்படங்களுக்காக தமிழ்நாடு மாநில அரசு விருது, ஆனந்த விகடன் விருது,விஜய் டிவியின் விருது, தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது(SIIMA)விருது,V4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமி விருது,தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்க விருது,நார்வே தமிழ் திரைப்பட விழா விருது, சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது போன்ற விருதுகளையும் சண்டைப்பயிற்சி இயக்குனராக சிறப்பாக பணியாற்றியதற்காக பெற்றிருக்கிறார்.
இந்நிலையில் 'பாலிவுட் பாட்ஷா' என்றழைக்கப்படும் 'ஷாருக்கான்' நடிப்பில், 'அட்லி' இயக்கத்தில், 'அனிருத்' இசையில்,'அனல்'அரசு அவர்கள் சண்டை பயிற்சி இயக்குநராக பணியாற்றிய 'ஜவான்' திரைப்படம் ரூ.1400 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி பிரம்மாண்ட வெற்றி அடைந்தது. இத்திரைப்படத்திற்கு சண்டைப்பயிற்சி இயக்குநராக சிறப்பாக பணியாற்றியதற்காக பல்வேறு தளங்களிலும் இவருக்கு அங்கீகாரங்கள் கிடைத்து, அதற்கான விருதுகளையும் வென்றிருக்கிறார்.
சமீபத்தில் 'ஜவான்' திரைப்படத்திற்காக ஃபிலிம்ஃபேர் விருதுகள் 2024-லும்,ஜீ சினி விருதுகள் 2024-லும் விருதுகளை வென்றுள்ளார். அனைத்திற்கும் உச்சமாக திரைப்பட சண்டை பயிற்சி துறைக்கு 'ஆஸ்கர் விருது' போன்ற ஒரு விருதான 'டாரஸ் வேர்ல்ட் ஸ்டண்ட் விருது'களுக்கான (Taurus World Stunt Awards) பட்டியலில் ஜான்விக் சாப்டர்-4, மிஷன்: இம்பாசிபிள்-டெட் ரெக்கனிங், எக்ஸ்ட்ராக்ஷன்-2, பேல்லரினா போன்ற திரைப்படங்களுடன் 'ஜவான்' திரைப்படமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...