Latest News :

நினைவுச் சின்னங்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்ட ’கல்கி 2898 AD’ படத்தின் அஸ்வத்தாமா கதாபாத்திரம்!
Monday April-22 2024

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில், பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகும் பிரமாண்டமான திரைப்படம் ’கல்கி 2898 AD’. ஒரு அற்புதமான புராணமும், அறிவியலும் கலந்த புனைவு கதை காவியமாக உருவாகும் இப்படம் துவக்கத்தில் இருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் தருணத்தில், ’கல்கி 2898 AD’ படத்தில் மெகா ஸ்டார் அமிதாப்பச்சன் ஏற்றிருக்கும் அஸ்வத்தாமா கதாபாத்திரத்தின் தோற்றத்தை வெளியிடும் நிகழ்வு, மத்திய பிரதேச மாநிலத்தின் புனித நகரமான நெமாவார் தொன்மையான நினைவுச் சின்னங்கள் அமையப் பெற்றிருக்கும் வளாகத்தில் நடைபெற்றது. இதன்போது ரசிகர்களும், படக்குழுவினரும்,  ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.

 

அமிதாப்பச்சனின் பிரம்மாண்டமான கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துவதற்கான இடமாக நெமாவாரை தேர்ந்தெடுத்தது, இக்கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை மேலும் வலியுறுத்துகிறது. ஏனெனில் இன்றும் அஸ்வத்தாமா, நெமாவார் மண்ணில் நடமாடுவதாக மக்களிடத்தில் நம்பிக்கை இருக்கிறது.

 

இதனிடையே அமிதாப்பச்சன் தனது கதாபாத்திரத்தின் ஒரு காட்சியை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டதுடன், ”இது எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.‌ தரமான தயாரிப்பு, நேர்த்தியான முறையில் செயல்படுத்தும் திட்டம், நவீன தொழில்நுட்பத்தின் வெளிப்பாடு மற்றும் அனைத்திற்கும் மேலாக இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியது மறக்க இயலாதது.” என்று தெரிவித்துள்ளார்.

 

'கல்கி 2898 AD' கடந்த ஆண்டு சான் டியாகோ காமிக் கானில் அதன் அற்புதமான அறிமுகத்திற்குப் பிறகு அதிர்வலைகளை உருவாக்கி, உலக அளவில் கவனத்தைக் கவர்ந்து, அங்கீகாரத்தை பெற்றது. நாக் அஸ்வின் இயக்கத்தில் வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில், ‘கல்கி 2898 AD’ ஒரு பன்மொழி திரைப்படமாக தயாராகிறது.

 

Related News

9699

வாழ்வின் இரண்டாவது வாய்ப்பின் அருமையை பேசும் ’செகண்ட் சான்ஸ்’ வீடியோ பாடல்!
Friday February-28 2025

கவிப்பேரரசு வைரமுத்து  வரிகளில், ஸ்ரீ பி இசையில், கலைமாமணி ஶ்ரீதர் மாஸ்டர் நடன அமைப்பில், ஜிவி பிரகாஷ் குமார், நரேஷ் ஐயர் மற்றும் ரக்‌ஷிதா குரல்களில் A Spot Light Entertainment தயாரிப்பில் சபரி மணிகண்டன் இயக்கத்தில், வாழ்வில் இரண்டாவது வாய்ப்பின் அருமையை பேசும் அழகான ஆல்பம் பாடலாக உருவாகியுள்ளது ’செகண்ட் சான்ஸ்’...

தனுஷின் ‘குபேரா’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Friday February-28 2025

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் ஜிம் சர்ப் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குபேரா’...

இரண்டு நிறுவனங்களின் இணைப்பால் திரைத்துறையில் ஏற்பட உள்ள புதிய புரட்சி!
Friday February-28 2025

உலகளாவிய நிறுவனமான SRAM & MRAM குழுமம் மற்றும் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனமான Paradigm Pictures AD Ltd ஆகியவற்றுக்கு இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க இணைப்பு,  மதிப்புமிக்க வாரன் ஹவுஸில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் வெளியிடப்பட்டது...

Recent Gallery