நடிகர் கமல்ஹாசனின் வரிகளில், அவரது ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிப்பில், ஸ்ருதி ஹாசன் இசையமைத்து, நடித்த வீடியோ பாடலில், அவருக்கு ஜோடியாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடித்திருந்தார்.
‘இனிமேல்’ என்ற தலைப்பில் கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி வெளியான இந்த வீடியோ பாடல், தற்போதைய நவீன உலக இளைஞர்களின் காதலின் அனைத்துவிதமான நிலைகளையும் அதன் ஏற்ற இறக்கங்களுடன் சித்தரிக்கும் வகையில் அமைந்துள்ளது.
சமகால காதலின் வடிவத்தை கச்சிதமாக படமாக்கப்பட்ட இந்த பாடல் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில், 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது அத்வி சேஷ் நடிக்கும் ‘டகாய்ட்’ படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். மேலும், அவரது நடிப்பில் உருவாகியுள்ள சர்வதேச திரைப்படமான ‘தி ஐ’ இந்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் ஜிம் சர்ப் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குபேரா’...
உலகளாவிய நிறுவனமான SRAM & MRAM குழுமம் மற்றும் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனமான Paradigm Pictures AD Ltd ஆகியவற்றுக்கு இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க இணைப்பு, மதிப்புமிக்க வாரன் ஹவுஸில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் வெளியிடப்பட்டது...
‘பியார் பிரேமா காதல்’, ‘மாமனிதன்’, ‘பொன் ஒன்று கண்டேன்’ ஆகிய படங்களை தொடர்ந்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது ஒய்...