கதாநாயகிகளை மையப்படுத்திய கதைக்களங்களில் தொடர்ந்து வெற்றிக் கொடுத்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடம் பிடித்ததோடு, தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி திரைப்படங்களிலும் தனது நடிப்பு மூலம் கவனம் ஈர்த்து வருகிறார்.
இந்த நிலையில், ‘உத்தராகாண்டா’ என்ற படத்தின் மூலம் ஐஸ்வர்யா ராஜேஷ் கன்னட சினிமாவில் கால் பதிக்கிறார். இந்த படத்தில், கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் டாக்டர்.சிவராஜ் குமார் மற்றும் டாலி தனஞ்செயா ஆகியோர் நடிக்கிறார்கள். இதில், டாலி தனஞ்செயாவுக்கு ஜோடியாக துர்கி என்ற கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இவர்களுடன் மலையாள நடிகர் விஜய் பாபு, ரங்காயண ரகு, சைத்ரா ஜே. ஆச்சார், உமா ஸ்ரீ, யோகராஜ் பட் , கோபாலகிருஷ்ண தேஷ் பாண்டே உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
கே.ஆர்.ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் கார்த்திக் கவுடா மற்றும் யோகி ஜி.ராஜ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை ரோஹித் பதகி இயக்குகிறார். அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பிரபல பாலிவுட் இசையமைப்பாளரும், பாடகருமான அமித் திரிவேதி இசையமைக்கிறார். கலை இயக்குநராக விஸ்வாஸ் காஷ்யப் பணியாற்றுகிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷின் அறிமுகத்தால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு பிஜய்ப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற்று வருகிறது.
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...