Latest News :

மலையாள நடிகையை விடாமல் பிடித்துக் கொண்ட ரியோ ராஜ்!
Saturday May-04 2024

தொலைக்காட்சி மூலம் பிரபலமாகி தற்போது வெள்ளித்திரையில் நாயகனாக வலம் வரும் ரியோ ராஜ் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியான திரைப்படம் ‘ஜோ’. அறிமுக இயக்குநர் ஹரிகரன் ராம் இயக்கிய இப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என்றாலும், படத்தில் அறிமுகமான மலையாள நடிகை மாளவிகா மனோஜ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், ரசிகர்களை மட்டும் அல்ல, நடிகர் ரியோ ராஜின் மனதையும் அவர் கவர்ந்துவிட்டார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

 

’ஜோ’ படம் வெளியாகி சுமார் ஐந்து மாதங்களுக்குப் பிறகு ரியோ ராஜ் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியிருக்கிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்த படத்தில் நாயகியாக ‘ஜோ’ படத்தில் நடித்த மலையாள நடிகை மாளவிகா மனோஜ் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் இந்த படத்திற்குள் வந்ததற்கு காரணம் ரியோ ராஜ் என்று சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. காரணம், இந்த புதிய படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக இருக்கும் கலையரசன் தங்கவேல் பிளாக்‌ஷீப் குழுவை சேர்ந்தவர் என்பதோடு, இந்த படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் நிருவனத்துடன் இணைந்து பிளாக்‌ஷீப் நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆக, பர்ஸ் காப்பி அடிப்படையில் தயாராகும் இந்த படத்தில் ரியோ ராஜ் நாயகனாக மட்டும் அல்ல பல விசயங்களில் தலையிடும் அதிகாரம் பெற்றிருப்பதால், கதாநாயகியை அவர் தான் தேர்வு செய்திருக்க வேண்டும். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் பிளாக்‌ஷிப் ஆர்.ஜே.விக்னேஷ் , ஷீலா ராஜ்குமார், இயக்குநர் ஏ.வெங்கடேஷ், கஜராஜன், ஜென்சன் திவாகர், ஆகியோரும் நடிக்கிறார்கள்.

 

திருமணமான ஆண்களின் பிரச்சினைகளை பெண்களும் ஏற்றுக்கொள்ளும்படியாக சொல்ல இருக்கும் இப்படத்திற்கு மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். வருண் கே.ஜி படத்தொகுப்பு செய்ய, வினோத் ராஜ்குமார் கலை இயக்குநராக பணியாற்றுகிறர். 

 

Rio Raj New Movie Start

 

நேற்று தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பை இரண்டே மாதங்களில் முடித்து, இந்த வருடத்தின் பிற்பகுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Related News

9724

”இது ஒரு பெரிய கனவு தான்!” - ‘கிங்ஸ்டன்’ படம் பற்றி மனம் திறந்த ஜீ.வி.பிரகாஷ் குமார்
Thursday February-27 2025

ஜீ ஸ்டுடியோஸ் - பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது...

’வீரவணக்கம்’ படத்தில் கம்யூனிச தோழராக நடிக்கும் சமுத்திரக்கனி!
Wednesday February-26 2025

பிரபல நடிகர்கள் சமுத்திரக்கனி பரத் முதல் முறையாக இணையும்  தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சகோதரத்துவத்தையும் இதய உறவுகளையும் உறுதிப்படுத்தும் ஒரு அபூர்வ திரைப்படம் 'வீர வணக்கம்'...

’பிறந்தநாள் வாழ்த்துகள்’ படத்தை ஓடிடியில் கொண்டாடுவார்கள் - நடிகர் அப்புக்குட்டி நம்பிக்கை
Tuesday February-25 2025

காமெடி நடிகராக அறிமுகமாகி, கதையின் நாயகனாக நடித்து தேசிய விருது வென்ற நடிகர் அப்புக்குட்டி, தற்போது கதாநாயகனாக சில படங்களில் நடித்து வந்தாலும், தொடர்ந்து குணச்சித்திரம், வில்லன், காமெடி என பல கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்...

Recent Gallery