Latest News :

”இந்த பணி மிகவும் தேவையான ஒன்று” - நடிகை ரெஜினா கசாண்ட்ரா
Sunday May-05 2024

‘ராக்கெட் பாய்ஸ்’ மற்றும் ‘ஃபார்சி’ போன்ற திரைப்படங்களில் வித்தியாசமான வேடங்களில் நடித்து கவனம் ஈர்த்த நடிகை ரெஜினா கசாண்டரா, தற்போது அஜித்தின் ‘விடாமுயற்சி’,  நவாசுதீன் சித்திக் நடிப்பில் உருவாகி வரும் ’செக்‌ஷன் 108’ படங்களில் நடித்து வருவதோடு, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். நடிப்பில் பிஸியாக இருந்தாலும், சமூக பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறார்.

 

அந்த வகையில், சமீபத்தில் அழகிய புடவையில் அசத்தலாக தூய்மை பணியில் ஈடுபட்ட ரெஜினா, தற்போது பிளாஸ்டிக் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக SUP மெரினா கிளப் உடன் கைகோர்த்துள்ளார்.

 

இது குறித்து கூறிய நடிகை ரெஜினா கசாண்ட்ரா, “எனக்கு மிகவும் பிடித்த விஷயம் துடுப்பு ஏறுதல் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதற்காக SUP மெரினா கிளப் -ஐ சேர்ந்த குழுவினரோடு இணைந்து கொண்டேன். அவர்களின் இந்த சமூக முன்னெடுப்பு எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது. இந்த பணியில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள முக்கிய காரணமாக இருந்தது 12 வயதான சிறுவன் அனிஷ் தான். இந்த குழுவை வழிநடத்தும் அனிஷ் என்னை இதில் கலந்து கொள்ள ஊக்கமளித்தார்.

 

Regina Cassendra

 

கடற்கரை மற்றும் நீர்நிலைகளை குப்பை கிடங்காக மாற்றிவிட கூடாது என்பதில் எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. சுற்றுச்சூழலில் இருந்து பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும். நீர் நிலைகள் நமக்கு அத்தியாவசியமானவை, அதை கலங்கடிக்க வேண்டாம். இந்த பணி மிகவும் தேவையான ஒன்று என நினைத்தேன். இந்த குழுவினரோடு இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது.” என்றார்.

Related News

9733

”இது ஒரு பெரிய கனவு தான்!” - ‘கிங்ஸ்டன்’ படம் பற்றி மனம் திறந்த ஜீ.வி.பிரகாஷ் குமார்
Thursday February-27 2025

ஜீ ஸ்டுடியோஸ் - பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது...

’வீரவணக்கம்’ படத்தில் கம்யூனிச தோழராக நடிக்கும் சமுத்திரக்கனி!
Wednesday February-26 2025

பிரபல நடிகர்கள் சமுத்திரக்கனி பரத் முதல் முறையாக இணையும்  தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சகோதரத்துவத்தையும் இதய உறவுகளையும் உறுதிப்படுத்தும் ஒரு அபூர்வ திரைப்படம் 'வீர வணக்கம்'...

’பிறந்தநாள் வாழ்த்துகள்’ படத்தை ஓடிடியில் கொண்டாடுவார்கள் - நடிகர் அப்புக்குட்டி நம்பிக்கை
Tuesday February-25 2025

காமெடி நடிகராக அறிமுகமாகி, கதையின் நாயகனாக நடித்து தேசிய விருது வென்ற நடிகர் அப்புக்குட்டி, தற்போது கதாநாயகனாக சில படங்களில் நடித்து வந்தாலும், தொடர்ந்து குணச்சித்திரம், வில்லன், காமெடி என பல கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்...

Recent Gallery