Latest News :

விக்ரம் தொடங்கி வைத்த ‘பைசன்’ படப்பிடிப்பு!
Monday May-06 2024

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகும் படத்திற்கு ‘பைசன் - காளமாடன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில், நாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் நடிக்கிறார்கள். இவர்களுடன் லால், பசுபதி, கலையரசன், ஹரி கிருஷ்ணன், அழகம் பெருமாள், அருவி மதன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

 

‘பரியேறும் பெருமாள்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் மாரி செல்வராஜுடன் தயாரிப்பாளராக கைகோர்த்திருக்கும் இயக்குநர் பா.இரஞ்சித், அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்.

 

நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் இப்படத்திற்கு, எழில் அரசு.கே ஒளிப்பதிவு செய்கிறார், எடிட்டராக சக்திகுமார், மூத்த கலை இயக்குநர் குமார் கங்கப்பன் கலை இயக்கத்தையும், ஸ்டண்ட் மாஸ்டராக திலீப் சுப்பராயன்,  ஆடை வடிவமைப்பாளராக ஏகன் ஏகாம்பரம் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

 

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (மே 6) பூஜையுடன் தொடங்கியது. இதில் நடிகர் விக்ரம் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.

 

Bison

Related News

9736

”மலையாளத்தில் கூட எனக்கு இப்படி ஒரு அறிமுகம் கிடைக்கவில்லை” - நடிகர் ஷேன் நிகம் மகிழ்ச்சி
Tuesday January-07 2025

பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...

’ஐடென்டிட்டி’ படத்தை கொண்டாடும் ரசிகர்கள்! - உற்சாகத்தில் படக்குழு
Tuesday January-07 2025

மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...

நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு நாயகனாக நடிக்கும் ’எமன் கட்டளை’!
Tuesday January-07 2025

கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...

Recent Gallery