இசையுலகில் திரைப்பட பாடல்களுக்கு நிகராக தற்போது இன்டிபென்டென்ட் மியூசிக்கல் ஆர்டிஸ்ட்டால் உருவாக்கப்படும் இன்டிபென்டென்ட் மியூசிக் ஆல்பங்களுக்கும் வரவேற்பு அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடத்தில் மறைந்திருக்கும் இசை திறமையை வெளிக்கொணரும் வகையிலும், அவர்களுக்கு புத்துணர்வு அளித்து ஊக்கமளிக்கும் வகையிலும் தமிழ் திரையிசையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளரும், பாடகருமான யுவன் சங்கர் ராஜா, 'மணி இன் தி பேங்க்' எனும் பெயரில் இன்டிபென்டென்ட் மியூசிக் ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
'மணி இன் தி பேங்க்' எனும் இன்டிபென்டென்ட் மியூசிக் ஆல்பத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலில் யுவன் சங்கர் ராஜா நடித்திருப்பதுடன் பாடலை எழுதி இசையமைத்து பாடியிருக்கிறார்.
ஜீ ஸ்டுடியோஸ் - பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது...
பிரபல நடிகர்கள் சமுத்திரக்கனி பரத் முதல் முறையாக இணையும் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சகோதரத்துவத்தையும் இதய உறவுகளையும் உறுதிப்படுத்தும் ஒரு அபூர்வ திரைப்படம் 'வீர வணக்கம்'...
காமெடி நடிகராக அறிமுகமாகி, கதையின் நாயகனாக நடித்து தேசிய விருது வென்ற நடிகர் அப்புக்குட்டி, தற்போது கதாநாயகனாக சில படங்களில் நடித்து வந்தாலும், தொடர்ந்து குணச்சித்திரம், வில்லன், காமெடி என பல கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்...