Latest News :

ராம் பொத்தினேனியின் ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் டீசர் நாளை வெளியாகிறது!
Tuesday May-14 2024

டைனமிக் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில்,  ராம் பொதினேனியின் அட்டகாசமான நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய திரைப்படமான ’டபுள் ஐஸ்மார்ட்’-ன் மாஸான டீசர் நாயகன ராம் பொதினேனியின் பிறந்தநாளான மே 15 (நாளை) வெளியாக உள்ளது.

 

டீசர் அறிவிப்பு போஸ்டரில் ராம் ஒரு பவர் பேக் அவதாரத்தில் இருக்கிறார். டைகர் ஸ்ட்ரிப் சட்டை மற்றும் டோர்ன் ஜீன்ஸ் அணிந்துள்ள ராம் ஒரு கையில் சிகரெட்டையும், மற்றொரு கையில் பட்டாசுகளையும் பிடித்திருக்கிறார். இதில் இருந்து மாஸ் ஆக்‌ஷன் ட்ரீட் ரசிகர்களுக்கு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

 

'ஐஸ்மார்ட் ஷங்கர்' படத்தின் இரண்டாம் பாகமான இந்த படம் அதிக பட்ஜெட்டில் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதால், அடுத்தடுத்த அப்டேட்களுடன் வரவுள்ளனர்.

 

டபுள் ஆக்‌ஷன், டபுள் மாஸ் மற்றும் டபுள் எண்டர்டெயின்மெண்ட் என இதன் இரண்டாம் பாகம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மீறியதாக இருக்கும். இதுவரை இல்லாத அளவுக்கு ராம் ஸ்டைலிஷாகவும், நடிகர் சஞ்சய் தத் பவர்ஃபுல்லான கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.

 

'ஐஸ்மார்ட் ஷங்கர்' உட்பட பல படங்களில் பூரி ஜெகன்நாத்திற்கு சிறந்த இசையை வழங்கிய மெல்லிசை பிரம்மா மணி ஷர்மா 'டபுள் ஐஸ்மார்ட்' படத்திற்கும் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை சாம் கே நாயுடு மற்றும் கியானி கியானெலி ஆகியோர் கையாள்கின்றனர்.

 

ராம் மற்றும் பூரியின் காம்பினேஷனில் உருவாகும் 'டபுள் ஐஸ்மார்ட்' திரைப்படம் பூரி கனெக்ட்ஸ் பேனரின் கீழ் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

 

'டபுள் ஐஸ்மார்ட்' திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியிடப்படும்.

Related News

9755

பிரபலங்கள் வெளியிட்ட ‘உசுரே’ படத்தின் முதல் பார்வை போஸ்டர்!
Thursday January-02 2025

ஸ்ரீ கிருஷ்ண புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீன் டீ...

கவனம் ஈர்க்கும் ‘எமகாதகி’ முதல் பார்வை போஸ்டர்!
Wednesday January-01 2025

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள ’எமகாதகி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது...

ஜெயலட்சுமி இயக்கத்தில் லிங்கேஷ் நாயகனாக நடிக்கும் புதிய படம்!
Wednesday January-01 2025

ஸ்கை வண்டர்ஸ் எண்டர்டெயின்மென் நிறுவனத்தின் சார்பில், ஜெயலட்சுமி தயாரித்து எழுதி, இயக்க, நடிகர் லிங்கேஷ் மற்றும் லண்டனைச் சேர்ந்த நாயகி லியா நடிப்பில், அருமையான காதல் கதையாக, ஒரு புதிய திரைப்படம் உருவாகி வருகிறது...

Recent Gallery