அறிமுக இயக்குநர் பிவி சங்கர் இயக்கத்தில், பாரதிராஜா, ஜி.வி.பிரகாஷ் குமார், இவானா ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் ‘கள்வன்’. ’ராட்சசன்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்த ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி ஜி.டில்லி பாபு தயாரித்த இப்படம், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்த நிலையில், ‘கள்வன்’ திரைப்படம் மே 14 ஆம் தேதி முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகியுள்ளது.
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு ரேவா பின்னணி இசையமைத்துள்ளார். சான் லோகேஷ் படத்தொகுப்பையும், என்.கே.ராகுல் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளையும் செய்துள்ளார்கள். இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை, எழுத்தாளர் ரமேஷ் ஐயப்பனுடன் இயக்குநர் பி.வி.ஷங்கர் எழுதியுள்ளார்.
ஸ்ரீ கிருஷ்ண புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீன் டீ...
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள ’எமகாதகி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது...
ஸ்கை வண்டர்ஸ் எண்டர்டெயின்மென் நிறுவனத்தின் சார்பில், ஜெயலட்சுமி தயாரித்து எழுதி, இயக்க, நடிகர் லிங்கேஷ் மற்றும் லண்டனைச் சேர்ந்த நாயகி லியா நடிப்பில், அருமையான காதல் கதையாக, ஒரு புதிய திரைப்படம் உருவாகி வருகிறது...