Latest News :

ஓடிடி தளங்களில் மே 17 ஆம் தேதி வெளியாகும் ‘ஹாட் ஸ்பாட்’ திரைப்படம்!
Wednesday May-15 2024

சமீபத்தில் பெரும் பரபரப்பை கிளப்பி, ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைக் குவித்த, இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கின் “ஹாட் ஸ்பாட்” திரைப்படம் வரும் மே 17 முதல், அமேசான் ப்ரைம் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில், ஸ்ட்ரீமாகவுள்ளது. 

 

கே ஜே பி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் சார்பில் கே ஜே பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் இணைந்து தயாரிக்க, இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில்,  சிக்ஸர் எண்டர்டெயின்மெண்ட் சார்பில், தினேஷ் கண்ணன் வெளியிட, ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசிய  ஹாட் ஸ்பாட் திரைப்படம் கடந்த  மார்ச் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

 

இப்படத்தில் கலையரசன்,   96 பட ஆதித்யா பாஸ்கர்,  மற்றும்  கௌரி கிஷன்,  சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி, ஜனனி ஐயர், திட்டம் இரண்டு பட ஹீரோ சுபாஷ், சோபியா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

 

சதீஷ் ரகுநாதன்-  வான் ஆகியோர் இசையமைத்துள்ளனர். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார், முத்தையன் எடிட்டிங் செய்துள்ளார்.

 

இப்படத்தின் டிரெய்லர் வெளியான நொடியிலேயே பெரும் விமர்சனங்களைக் குவித்தது. படம் வெளியான பிறகு படத்தின் நெகட்டிவிடி மொத்தமும் பாஸிடிவிடியாக மாறியது. ரசிகர்கள் மட்டுமல்லாது விமர்சகர்களும் இப்படத்தை கொண்டாடினார்கள்.  சமூகம் பேசத் தயங்கும் பல விசயங்களை, மிகத் தைரியமாக, மிகத் தெளிவாக கையாண்ட விதத்தில், இப்படம் பரவலான பாராட்டுக்களைப் பெற்றது.    

 

தற்போதைய திரையரங்கு சூழ்நிலையில் இப்படம் திரையங்குகளில் முழுதாக 5 வாரங்களைக்  கடந்து சாதனை படைத்தது. இப்படம் எப்போது ஓடிடியில் வெளிவருமென ரசிகர்கள் ஆர்வத்துடன் கேட்டு வந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவுள்ளது. 

 

இப்படம் அமேசான் ப்ரைம், மற்றும் ஆஹா என இரண்டு முன்னணி ஓடிடி தளங்களில், வரும் மே 17 முதல் வெளியாக உள்ளது.

Related News

9762

வெற்றியைக் கொண்டாடிய ‘விடுதலை - பாகம் 2’ படக்குழு!
Tuesday December-31 2024

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி ஆகியோரது நடிப்பில், ஆர்...

நடிகர் பிரஜ்வல் தேவராஜ் நடிக்கும் 'கரவாலி' படத்தின் டீசர் வெளியானது!
Monday December-30 2024

இந்திய திரையுலகில் 2025 ஆம் ஆண்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் 'கரவாலி'...

கருணாஸ்-நிமிஷா சஜயன் நடிக்கும் ’என்ன விலை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!
Monday December-30 2024

இயக்குநர் சஜீவ் பழூர் இயக்கத்தில் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள சோஷியல்- பொலிட்டிகல்- திரில்லர் படமான ‘என்ன விலை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது...

Recent Gallery