Latest News :

விஜய் சேதுபதியின் புதிய படத்தின் தலைப்பு ‘ஏஸ்’!
Saturday May-18 2024

இயக்குநர் ஆறிமுக குமார் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்திற்கு ‘ஏஸ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில், ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்க, யோகி பாபு, பி.எஸ்.அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

 

7Cs எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு கரண் பகதூர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, கலை இயக்குநராக ஏ.கே.முத்து கையாள பணியாற்றியிருக்கிறார். ஆர்.கோவிந்தராஜ் படத்தொகுப்பு செய்கிறார்.

 

இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் தலைப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், விஜய் சேதுபதியின் தோற்றம் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதிலும் விஜய் சேதுபதியின் இளமையானத் தோற்றம், புகை பிடிக்கும் குழாய்,  தாயக்கட்டை என பல சுவாரஸ்யமான விசயங்கள் இடம் பிடித்திருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. 

 

தலைப்பிற்கான டீசரில் படத்தில் தோன்றும் முன்னணி  நட்சத்திர கலைஞர்களின் அறிமுகமும், பின்னணி இசையும், விஜய் சேதுபதியின் திரை தோன்றலும் ரசிகர்களை ஈர்த்திருக்கிறது. டீசரில் சூதாட்டம்,  துப்பாக்கி, குண்டு வெடிப்பு,  கொள்ளை, பைக் சேசிங், போன்றவை இருந்தாலும், யோகி பாபுவின் ரியாக்ஷன் சிறப்பாக இருப்பதாலும்  இந்த திரைப்படம் கிரைம் வித் காமெடி திரில்லராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

 

மேலும் இந்த டீசரில் அனிமேஷன் பாணியில் கதாபாத்திரங்கள் அறிமுகமாவதும், அதற்கு ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசையும் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதால் 'ஏஸ்' படத்தின் முதல் பார்வை மற்றும் டைட்டிலுக்கான டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் இப்படத்தின் சிங்கிள் ட்ராக் மற்றும் டீசர் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

 

விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டில் வெளியாகும் இரண்டாவது படம் இது என்பதால் 'ஏஸ்' படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடமும், திரையுலக வணிகர்களிடமும் அதிகரித்திருக்கிறது.

Related News

9767

வெற்றியைக் கொண்டாடிய ‘விடுதலை - பாகம் 2’ படக்குழு!
Tuesday December-31 2024

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி ஆகியோரது நடிப்பில், ஆர்...

நடிகர் பிரஜ்வல் தேவராஜ் நடிக்கும் 'கரவாலி' படத்தின் டீசர் வெளியானது!
Monday December-30 2024

இந்திய திரையுலகில் 2025 ஆம் ஆண்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் 'கரவாலி'...

கருணாஸ்-நிமிஷா சஜயன் நடிக்கும் ’என்ன விலை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!
Monday December-30 2024

இயக்குநர் சஜீவ் பழூர் இயக்கத்தில் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள சோஷியல்- பொலிட்டிகல்- திரில்லர் படமான ‘என்ன விலை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது...

Recent Gallery