இயக்குநர் வெற்றிமாறன் தனது கிராஸ் ரூட் ஃபிலிம் நிறுவனம் மூலம் ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’, ‘கொடி’, ‘வட சென்னை’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்திருக்கும் நிலையில், தற்போது பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘மாஸ்க்’ என்ற படத்தை தயாரிக்கிறார். இதில் கவின் நாயகனாக நடிக்க, நாயகியாக ஆண்ட்ரியா நடிக்கிறார். இவர்களுடன் ருஹானி ஷர்மா,பால சரவணன், அர்ச்சனா சந்தோக் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இப்படத்தை இயக்குகிறார். இவர் ‘தருமி’ என்ற குறும்படத்திற்காக பிஹைண்ட்வுட்ஸ் கோல்ட் மெடல் விருது விழாவில் சிறந்த குறும்படத்திற்கான விருதை வென்றுள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.ராமர் படத்தொகுப்பு செய்ய, ஜாக்கி கலை இயக்குநராக பணியாற்றுகிறார். பூர்த்தி மற்றும் விபின் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்ற,
நிர்வாக தயாரிப்பாளர் எஸ்.பி.சொக்கலிங்கம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.
இப்படத்தின் துவக்க விழா இன்று பூஜையுடன் நடைபெற்றது. படப்பிடிப்பு மே மாதம் இறுதியில் சென்னையில் துவங்குகிறது.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி ஆகியோரது நடிப்பில், ஆர்...
இந்திய திரையுலகில் 2025 ஆம் ஆண்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் 'கரவாலி'...
இயக்குநர் சஜீவ் பழூர் இயக்கத்தில் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள சோஷியல்- பொலிட்டிகல்- திரில்லர் படமான ‘என்ன விலை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது...