முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தனது அடுத்த தமிழ் இணையத் தொடரான ‘உப்பு புளி காரம்’ பற்றிய அறிவிப்பை ஏற்கனவே அறிவித்த நிலையில், தற்போது அதன் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. அதன்படி, வரும் மே 30 ஆம் தேதி ‘உப்பு புளி காரம்’ தொடர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
’கனா காணும் காலங்கள்’ மற்றும் ’ஹார்ட் பீட்’ தொடர் பார்வையாளர்களின் இதயங்களை வென்றது போல, இந்த ’உப்பு புளி காரம்’ தொடரும் காதல், காமெடி, குடும்ப செண்டிமெண்ட் மற்றும் பல அதிரடி திருப்பங்களுடன் அட்டகாசமான பொழுதுபோக்கை வழங்கும்.
'உப்பு புளி காரம்' ஒரு வயதான அழகான தம்பதிகள் மற்றும் அவர்களின் நான்கு குழந்தைகள் என அவர்களின் குடும்பத்தில் நிகழும் சம்பவங்களை சுற்றி பின்னப்பட்ட அழகான கதையாகும்.
இதில், நடிகர்கள் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஷ்வினி, தீபிகா, கிருஷ்ணா, ஃபரினா, தீபக் பரமேஷ் மற்றும் ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே இடம்பெற்றுள்ளது.
விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரித்துள்ள இந்த தொடரை எம்.ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார். ஷேக் இசையமைக்க, பார்த்திபன் மற்றும் சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள்.
ஜீ ஸ்டுடியோஸ் - பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது...
பிரபல நடிகர்கள் சமுத்திரக்கனி பரத் முதல் முறையாக இணையும் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சகோதரத்துவத்தையும் இதய உறவுகளையும் உறுதிப்படுத்தும் ஒரு அபூர்வ திரைப்படம் 'வீர வணக்கம்'...
காமெடி நடிகராக அறிமுகமாகி, கதையின் நாயகனாக நடித்து தேசிய விருது வென்ற நடிகர் அப்புக்குட்டி, தற்போது கதாநாயகனாக சில படங்களில் நடித்து வந்தாலும், தொடர்ந்து குணச்சித்திரம், வில்லன், காமெடி என பல கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்...