Latest News :

இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணனுடன் மீண்டும் கைகோர்த்த ஷிரிஷ் மற்றும் பாபி சிம்ஹா!
Wednesday May-29 2024

ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் ஷிரிஷ் மற்றும் பாபி சிம்ஹா நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘மெட்ரோ’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான ஷிரிஷ், தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் நிலையில், ’நான் வயலன்ஸ்’ படம் மூலம் மீண்டும் இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணனுடன் கைகோர்த்துள்ளார். 

 

ஏ.கே பிக்சர்ஸ் சார்பில் லேகா தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகாந்த்.என்.பி படத்தொகுப்பு செய்கிறார். 

 

90 களின் மதுரை மாநகரைச் சுற்றி,  இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் மதுரையின் சிறைக்குள் நடக்கும், பெரும்பாலான சம்பவங்களை மையமாக வைத்து, சுவாரஸ்யமான திரைக்கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர்  ஆனந்த கிருஷ்ணன். மெட்ரோ, கோடியில் ஒருவன் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன்  இயக்கத்தில்  இப்படமும் ஹாட்ரிக் வெற்றியைப் பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. 

 

90களின் காலகட்டத்தில்  நடக்கும் கதை என்பதால்,  அந்த காலகட்டத்தைத் திரையில் கொண்டுவரப் படக்குழு  பெரும் உழைப்பைக் கொட்டியுள்ளது. அந்தகாலகட்டத்தில் பயன்படுத்திய பொருட்கள், உடைகள், இடமென ஒவ்வொன்றையும் மிகக் கவனமாகக் கையாண்டு, திரையில் கொண்டுவந்துள்ளது படக்குழு. இக்கால தலைமுறைக்கு ஒரு புதுமையான திரை அனுபவமாக இப்படம் இருக்கும்.

 

நடிகர் மெட்ரோ ஷிரிஷ் , பாபி சிம்ஹா, யோகி பாபு முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, அதிதி பாலன், கருட ராம், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. விரைவில் இப்படத்தின் டீசர், டிரைலர் பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.

Related News

9795

சன்னி தியோல் மற்றும் கோபிசந்த் மிலினேனி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஜூன் 22 ஆம் தேதி தொடங்குகிறது!
Thursday June-20 2024

இந்தியாவையே தன் ’கதர் 2’  படம்  மூலம் திரும்பிப் பார்க்க வைத்த பாலிவுட் நட்சத்திர நடிகர் சன்னி தியோல், தன் அடுத்த படத்தைத் துவக்கியுள்ளார்...

’குட் நைட்’ பட தயாரிப்பு நிறுவனங்களுடன் கைகோர்த்த ஆர்ஜே பாலாஜி!
Thursday June-20 2024

‘குட் நைட்’ மற்றும் ‘லவ்வர்’ என்று ரசிகர்களை கொண்டாட வைத்த வெற்றி படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்...

பிரபு தேவாவின் புதிய படத்தின் தலைப்பு ‘மூன் வாக்’!
Wednesday June-19 2024

பிரபல டிஜிட்டல் ஊகமான பிகைண்ட்உட்ஸ் (Behindwoods) தயாரிக்கும் திரைப்படத்தை அந்நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலருமான (CEO) மனோஜ்...