Latest News :

’பிக் ஷார்ட்ஸ்’ குறும்பட போட்டியின் மூன்றாவது சீசன் தொடங்கியது!
Friday June-07 2024

மூன்றே நிமிடங்களில் அழுத்தமான திரைக்கதையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், இளம் திரைப்படப் படைப்பாளிகளை உலகுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக ‘Big Shorts’ குறும்பட போட்டியின் 3 வது சிசனுக்காக மூவிபஃபுடன் இணைவதில் பெரும் உற்சாகமடைகிறது டர்மெரிக் மீடியா. இதன் மூலம் திரைப்படம் உருவாக்க ஆர்வமுள்ளவர்கள், தயாரிப்பு நிறுவனங்கள், திரையரங்குகள், பார்வையாளர்கள் ஆகியோரை ஒரே இடத்தில் சந்திக்க வைக்கும் தளமாக இந்த போட்டி உள்ளது.

 

படைப்பாற்றல் கொண்ட இளைஞர்கள், சினிமாத் துறையின் முக்கியஸ்தர்களுடன் தொடர்பு கொள்ளவும், தங்களின் கனவை நனவாக்கும் விதமாக படங்களை உருவாக்கவும் இது வாய்ப்பளிக்கிறது. கூடவே தாங்கள் எடுத்த படங்களைப் பெரிய திரையில் பார்க்கவும் இந்த போட்டி உதவியாக இருக்கும். 2017-ல் நடந்த இந்த போட்டியின் முதல் சீசனில் வெற்றி பெற்ற படங்கள் தமிழ்நாட்டில் மட்டும் 40 நகரங்களில் சுமார் 500 திரைகளில் திரையிடப்பட்டு லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்தது.

 

இந்த ஆண்டு நடக்கவிருக்கும் போட்டியின் நடுவர்களாக இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், எஸ்.யு.அருண்கிஉமார், ஹலீதா ஷமீம், எடிட்டர்கள் செல்வா ஆர்.கே, ஸ்ரீகர் பிரசாத், பிலோமின் ராஜ், ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், திரைப்பட விமர்சகர் ஸ்ரீதர் பிள்ளை மற்றும் பிரதீப் ரங்கநாதன் (சிறப்பு விருந்தினர்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 

வெற்றி பெறும் முதல் 3 போட்டியாளர்கள் டர்மெரிக் மீடியா மற்றும் மூவி பஃப்பிலிருந்து ரொக்கப் பரிசுகளை வெல்வார்கள். முதலிடத்தில் வெற்றி பெறுபவருக்கு ரூ.5 லட்சம் பரிசுத் தொகையும், இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.3 லட்சம் பரிசுத் தொகையும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.2 லட்சம் ரூபாயும் வழங்கப்படும். வெற்றியாளருக்கு அவர்களின் ஸ்கிரிப்டை டர்மெரிக் மீடியா பிரைவேட் லிமிடெட் மற்றும் ஒரு விநியோக நிறுவனத்திடம் கூறுவதற்கான வாய்ப்பு மற்றும் அவர்களுடன் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பும் வழங்கப்படும்.

 

க்யூப்  சினிமா டெக்னாலஜியின் தலைமைச் செயல் அதிகாரி ஹர்ஷ் ரோஹத்கி கூறுகையில், கியூப், ஒவ்வொரு திரைப் படைப்புக்கும் மேலும் உயீருட்ட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். மூவி பஃப்பின் Big Shorts அதே நோக்கத்தில் நாம் மேலும் ஒரு படி மேலேறுவதற்கான வழியாக உள்ளது. தயாரிப்பு, படப்பிடிப்பு, போஸ் புரொடக்‌ஷன், விநியோகம் உட்பட சினிமாவின் அனைத்து அம்சங்களுக்கும் தொழில்நுட்பத்தை வழங்கும் இடத்தில் கியூப் செயல்படுகிறது. ‘Big Shorts என்பது அடுத்த தலைமுறை படைப்பாளிகளுக்கு சினிமாவின் அரங்கைத் திறந்துவிடவும், சினிமா சூழலைச் செழிப்பாக வைத்திருக்கவும் ஒரு படியாக இருக்கும். சினிமா துறையில் இளம் திறைமையாளர்களை வளர்ப்பதில் டர்மெரிக் மீடியாவின் ஆர்வத்தைப் பார்த்து நாங்கள் வியக்கிறோம் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.

 

டர்மெரிக் மீடியாவைச் சேர்ந்த மகேந்திரன் கூறுகையில், “Big Shorts குறும்படப் போட்டியின் 3 வது சீசனை மூவிபஃப் நிறுவனத்துடன் இணைந்து வழங்குவதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். திரைப்படத்துறையில் திறமையானவர்களை கண்டறியும் பணியை நாங்கள் தொடர்ந்து செய்து வருகிறோம். அப்படி ஏற்கனவே பலரை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். அதே பணியை இந்த ஆண்டும் சிறப்பாகச் செய்து முடிப்போம் என்று நாங்கள் நம்புகிறோம். Big Shorts போட்டியின் மூலம் திறமையான இளம் படைப்பாளிகளிடம் இருந்து மிகச் சிறந்த 3 நிமிடக் குறும்படங்களை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

 

Big Shorts வழக்கமான பார்வையாளர்களைக் கவர்வதையும் தாண்டி, புதிய வயது பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் புதுமையான மற்றும் ஈர்க்கக்கூடிய கதைக்களத்தை வழங்க விரும்புகிறது. இந்த அற்புதமான இணைப்பின் மூலம் டர்மெரிக் மீடியா மற்றும் மூவிபஃப் நிறுவனங்கள் கதை சொல்லலின் எல்லைகளைத் தாண்டி, குறும்பட வடிவத்தில் திரைப்படப் படைப்பாளிகளுக்கு ஒரு அற்புதமான தளத்தை வழங்கவுள்ளது.

 

போட்டி விவரங்கள் :

 

போட்டி மே 22 ஆம் தேதி தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் பங்கேற்க நினைப்பவர்கள் bigshorts.moviebuff.com-இல் பதிவு செய்யலாம். ஜூலை 1 ஆம் தேதிக்குள் தங்கள் எண்ட்ரிகளை சமர்ப்பிக்கவும். திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் திரைப்பட் ஆர்வலர்கள் அடங்கிய புகழ்பெற்ற வல்லுநர்கள் குழு திரைப்படங்களைத் தேர்வு செய்யும். அவை பொது வாக்களிப்பிற்காக ஆன்லைனில் வெளியிடப்படும்.

 

ஆன்லைன் வாக்களிப்பின் அடிப்படையில், முதல் ஐந்து படங்கள் ஐந்து வாரங்களுக்குப் பெரிய திரையில் திரையிடப்படும். கியூப் சினிமா நெட்வொர்க்கின் பல திரையரங்கு விநியோக மாவட்டங்களில் 500 திரைகளில் இந்த படங்கள் வெளியிடப்படும். அந்த நேரத்தில் Big Shorts இல் இந்த முதல் ஐந்து படங்கள் அதிக வாக்குகளைப் பெறும் படம் வெற்றிப்படமாக அறிவிக்கப்படும். 2024-ம் ஆண்டின் மத்தியில்  வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். மேலும் தகவலுக்கு bigshorts.moviebuff.com என்ற தளத்தை பார்வையிடவும்.

Related News

9806

’வீரவணக்கம்’ படத்தில் கம்யூனிச தோழராக நடிக்கும் சமுத்திரக்கனி!
Wednesday February-26 2025

பிரபல நடிகர்கள் சமுத்திரக்கனி பரத் முதல் முறையாக இணையும்  தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சகோதரத்துவத்தையும் இதய உறவுகளையும் உறுதிப்படுத்தும் ஒரு அபூர்வ திரைப்படம் 'வீர வணக்கம்'...

’பிறந்தநாள் வாழ்த்துகள்’ படத்தை ஓடிடியில் கொண்டாடுவார்கள் - நடிகர் அப்புக்குட்டி நம்பிக்கை
Tuesday February-25 2025

காமெடி நடிகராக அறிமுகமாகி, கதையின் நாயகனாக நடித்து தேசிய விருது வென்ற நடிகர் அப்புக்குட்டி, தற்போது கதாநாயகனாக சில படங்களில் நடித்து வந்தாலும், தொடர்ந்து குணச்சித்திரம், வில்லன், காமெடி என பல கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்...

கோலிவுட்டுக்கு குறிவைக்கும் சேலம் வேங்கை அய்யனார்!
Tuesday February-25 2025

தமிழ் சினிமாவில் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என புதியவர்களின் வருகை வழக்கமானதாக இருந்தாலும், இதில் சிலர் தங்களது நடிப்பு மற்றும் திரைப்படங்கள் மூலம் எளிதில் கவனம் ஈர்த்து விடுவார்கள்...

Recent Gallery