Latest News :

”‘கண்ணப்பா’ காவியம் உருவாவதற்கு காரணம் சிவபெருமான் தான்” - டீசர் வெளியீட்டு விழாவில் டாக்டர்.மோகன் பாபு நெகிழ்ச்சி
Friday June-14 2024

விஷ்ணு மஞ்சுவின் கனவுத் திட்டமான 'கண்ணப்பா' படத்தை ஏவிஏ என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் 24 பிரேம்ஸ் பேக்டரி நிறுவனங்கள் இணைந்து பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்தை பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான டாக்டர்.மோகன் பாபு தயாரிக்க, முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார். 

 

தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நாயகனான விஷ்ணு மஞ்சு கண்ணப்பா கதாபாத்திரத்தில் நடிக்க, மோகன் லால், பிரபாஷ், அக்‌ஷய் குமார், சரத்குமார் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று (ஜூன் 14) பிரமாண்டமாக நடைபெற்றது.

 

நிகழ்ச்சியில் டாக்டர்.மோகன் பாபு பேசுகையில், “’கண்ணப்பா’ எந்த தலைமுறையினருக்கும் புதியவர். மகா கவி துர்ஜதி இதை எப்படி பக்தி சிரத்தையுடன் எழுதினார்?, ஸ்ரீகாளஹஸ்தியின் முக்கியத்துவம் என்ன? என்பதை இந்த படத்தில் காட்டியுள்ளோம். மிகுந்த முயற்சியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்திய சினிமாவின் மிகப்பெரிய காவியமாக உருவாகியுள்ள இப்படத்தில் இந்தியாவின் நான்கு மூலைகளிலிருந்தும் பெரிய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். பரமேஸ்வராவின் கட்டளையின் பேரில், கண்ணப்பாவிற்காக நாங்கள் கடுமையாக உழைத்திருக்கிறோம். மேலும் பிரபாஸுக்காக எழுதப்பட்ட கதையாகவும் இதை கிருஷ்ணம் ராஜு கொடுத்திருக்கிறார். இந்த மாபெரும் காவிய படைப்பின் தயாரிப்பாளராக நான் இருந்தாலும், இந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் ‘கண்ணப்பா’-வின் காவியத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள், அவர்கள் அனைவருக்கும் உங்களுடைய ஆசீர்வாதம் வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

 

நாயகன் விஷ்ணு மஞ்சு பேசுகையில், “’கண்ணப்பா’ படம் முதல் நாளிலிருந்து இன்று வரை ஒவ்வொரு ரசிகர்களின் தோளிலும் படமாகி வருகிறது. சமூக வலைதளங்களில் ரசிகர்களின் ஆதரவைப் பார்த்தேன். அதனால் தான் அவர்களில் சிலரை இங்கு அழைத்தேன். 2014 ஆம் ஆண்டு கண்ணப்பாவின் பயணம் தொடங்கியது. 2015-ல் நான் கண்ணப்பாவை தொடங்கும் போது, ​​என் கடவுள், என் அப்பா மோகன்பாபு, வின்னி, அண்ணன் வினய் ஆகியோர் கொடுத்த ஊக்கத்தால் தான் என்னை முழுவதுமாக நம்பி கண்ணப்பாவை திரைக்குக் கொண்டு வர முடிந்தது. 

 

படம் தொடங்க நினைத்த போது அதற்கான சரியான குழு எனக்கு அமையவில்லை என்றாலும், சிவபெருமான் அனுமதி அளித்ததால் படத்தை தொடங்குவதற்கான அனைத்தையும் நான் தயார் செய்தேன், அதற்கு காரணம் கண்ணப்பாவின் ஆசீர்வாதமும் கூட. இதை ஒரு புராணக்கதை என்று மட்டுமே பார்க்க கூடாது. 14 ஆம் நூற்றாண்டில் நாயனார்களைப் பற்றி கவிஞர் துர்ஜதி எழுதினார். கண்ணப்பா ஒன்பாதவது நாயனார். இது 18 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ளது. அந்த புத்தகத்தை பிகானர் பல்கலைக்கழகத்தில் கண்டோம். அந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு, அதை மிகவும் கவனமாகப் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு பயணிக்கிறேன். கண்ணப்பா என் குழந்தை மாதிரி. ஏன் இத்தனை கலைஞர்களை இந்தப் படத்துக்குத் தேர்வு செய்தார்கள் என்பது படத்தை பார்த்த பிறகுதான் அனைவருக்கும் புரியும். இனிமேல், ஜூலை முதல் ஒவ்வொரு திங்கட்கிழமையும் கண்ணப்பாவிடம் இருந்து அப்டேட்கள் வரும். இது என் பார்வையில் எழுதப்பட்ட 'கண்ணப்பா', அதனால் தான் கண்ணப்ப உலகத்துக்கு எல்லாரையும் அழைத்தோம். நான் இரண்டாம் நூற்றாண்டின் கதையைச் சொல்கிறேன், அந்தக் காலகட்டத்திற்கு ஏற்றவாறு படத்தை நியூசிலாந்தில் படமாக்கினோம். பட்ஜெட் பற்றி நாங்கள் சிந்திக்கவில்லை, வரலாற்றில் இடம்பிடிக்கும் ஒரு திரைப்படத்தை உருவாக்குகிறோம் என்ற நம்பிக்கையுடன் படத்தை தயாரித்து வருகிறோம். ப்ரீத்தி முகுந்தன் நெமாலியாக நடிக்கிறார். கண்ணப்பாவை உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். ஹர ஹர மகாதேவ்.” என்றார்.

 

இயக்குநர் முகேஷ் குமார் சிங் பேசுகையில், ”கண்ணப்பா படத்தில் எனது பலம் எனது கலைஞர்களிடம் உள்ளது. விஷ்ணுவின் நடிப்பு மற்றும் அவர் பட்ட கஷ்டங்கள் பற்றி அதிகம் சொல்ல முடியாது. கடும் குளிரிலும் ஒட்டுமொத்த குழுவும் கடுமையாக உழைத்தோம். விஷ்ணு சார், சரத்குமார். அய்யா மோகன்பாபு சார் மிகவும் பிரமாதமாக செயல்பட்டார்கள். நான் எதிர்பார்த்ததை விட படம் மிகச்சிறப்பாக வந்திருப்பதற்கு காரணம் கடவுளிடம் நான் பிரார்த்தனை செய்ததாக இருந்தாலும், கண்ணப்பா எதையும் கேட்காமல் கடவுளுக்காக தன்னை எப்படி அர்ப்பணித்தார் என்பதை இந்த படத்தில் மிக பிரமாண்டமான முறையில் சொல்லியிருக்கிறோம்.” என்றார்.

 

நடிகர் சரத்குமார் பேசுகையில், “’கண்ணப்பா’ வெறும் திரைப்படம் அல்ல, இது நமது வரலாறு. ஒவ்வொருவரும் அவரவர் வேடங்களில் வாழ்ந்தனர். இப்போதும் அந்த வேடங்களில் நாங்கள் இருக்கிறோம். அனைவரும் வரலாற்றை மறந்து விடுகிறார்கள். நம் வரலாற்றை நாம் சொல்ல வேண்டும். அனைவரும் கண்ணப்பாவைப் பார்க்க வேண்டும்.” என்றார்.

 

Kannappa Teaser Launch

 

நடிகை மதுபாலா பேசுகையில், “கண்ணப்பா போன்ற படத்தில் நடிப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். எனக்கு இதுபோன்ற நல்ல வாய்ப்பை வழங்கிய மோகன் பாபுவுக்கும், விஷ்ணுவுக்கும் நன்றி. விஷ்ணு மஞ்சுவுக்கு படத் தயாரிப்பில் அறிவு அதிகம். விஷ்ணு போன்ற ஒருவரால் மட்டுமே இப்படி ஒரு பிரமாண்டமான காவியத் திரைப்படத்தை எடுக்க முடியும். ஒரு பெரிய யாகத்தில் பங்கேற்பது போல் உணர்ந்தேன்.” என்றார்.

 

நடிகை ப்ரீத்தி முகுந்தன் பேசுகையில், “’கண்ணப்பா’ படத்தில் வாய்ப்பு கொடுத்த மோகன் பாபு, விஷ்ணு, முகேஷ் சிங் ஆகியோருக்கு நன்றி. இந்தப் படத்திற்காக அனைவரும் தங்களால் இயன்றதை கொடுத்துள்ளனர். படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.” என்றார்.

Related News

9825

தயாரிப்பாளர் தாணு கன்னட சினிமாவில் தனது முத்திரையை பதிக்க வேண்டும் - நடிகர் சுதீப் விருப்பம்
Thursday December-26 2024

தமிழ் திரைப்படம் MAX-இன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ட்ரெய்லர் மற்றும் பாடல்களுடைய முன்னோட்டம் இன்று பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது...

‘அகத்தியா’ மூலம் புதுமையான உலகைப் படைத்திருக்கும் டாக்டர்.ஐசரி கே.கணேஷ் - பா.விஜய் கூட்டணி!
Tuesday December-24 2024

டாக்டர். ஐசரி கே. கணேஷ் அவர்களால் துவங்கப்பட்ட, தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்,  அனீஷ் அர்ஜுன் தேவ் அவர்களின் வாமிண்டியா நிறுவனத்துடன் இணைந்து, தயாரிக்கப்பட்ட திரைப்படம் ’அகத்தியா’...

Coke Studio Tamil Season 2 wraps up with pride in Tamil music, culture and diversity
Tuesday December-24 2024

Coke Studio Tamil has wrapped up its remarkable Season 2, leaving a lasting impact by celebrating Tamil music and culture with a stellar lineup of artists...

Recent Gallery