ஸ்ரீ சித்தி விநாயகா மூவி மேக்கர் சார்பில் டி.ராஜஸ்வரராவ் தயாரிப்பில் ஏ.அபிராமு இயக்கத்தில் வெளியான தெலுங்குத் திரைப்படம், ‘சட்டம் என் கையில்’ என்ற தலைப்பில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.
இந்த படத்தில் சாய் தன்ஷிகா கதையின் நாயகியாக நடிக்க, விமலா ராமன், கணேஷ் வெங்கட்ராமன், சத்யபிரகாஷ், தீபாவளி தீபு, நாகமகேஷ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
எதை வேண்டுமானாலும் விலைக்கு வாங்கக்கூடிய சக்திப்படைத்த ஒரு ஜமீந்தார் குடும்பத்திற்கும், நீதிக்க்காக போராடும் ஒரு ஏழ்மை நிலையிலுள்ள பெண்ணிற்கும் நடக்கும் யுத்தத்தை, தனி ஒரு பெண்ணாக நின்று சட்டத்தின் முன் போராடி, தன் கையினால் தீர்ப்பு கொடுத்த வீர தீர பெண்ணின் கதை தான் ‘சட்டன் என் கையில்’ என்கிறார் தயாரிப்பாளர் டி.ராஜேஸ்வரராவ்.
என்.சுதாகர் ரெட்டி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு கோட்டி இசையமைக்க, பத்மா பாடல்கள் மற்றும் வசனம் எழுதியுள்ளார். மக்கள் தொடர்பாளராக வெங்கட் பணியாற்றுகிறார்.
கமலஹாசன் நடித்து 1978 ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற ’சட்டம் என் கையில்’ படத்தின் தலைப்பையே இப்படத்திற்கு வைத்திருப்பது படத்திற்கு கூடுதல் பலம்.
இப்படத்தின் செண்டிமெண்ட் காட்சிகள் கல் நெஞ்சக்காரர்களையும் கரைய வைக்கும் விதத்தில் இருப்பதோடு, பாடல் காட்சிகளும், சண்டை காட்சிகளும் தனி முத்திரை பதிக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இப்படம் தமிழகம் முழுவதும் வரும் ஜூன் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
பிரபல நடிகர்கள் சமுத்திரக்கனி பரத் முதல் முறையாக இணையும் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சகோதரத்துவத்தையும் இதய உறவுகளையும் உறுதிப்படுத்தும் ஒரு அபூர்வ திரைப்படம் 'வீர வணக்கம்'...
காமெடி நடிகராக அறிமுகமாகி, கதையின் நாயகனாக நடித்து தேசிய விருது வென்ற நடிகர் அப்புக்குட்டி, தற்போது கதாநாயகனாக சில படங்களில் நடித்து வந்தாலும், தொடர்ந்து குணச்சித்திரம், வில்லன், காமெடி என பல கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்...
தமிழ் சினிமாவில் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என புதியவர்களின் வருகை வழக்கமானதாக இருந்தாலும், இதில் சிலர் தங்களது நடிப்பு மற்றும் திரைப்படங்கள் மூலம் எளிதில் கவனம் ஈர்த்து விடுவார்கள்...