இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ராம் பொதினேனி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘ஐஸ்மார்ட் ஷங்கர்’ படத்தை தொடர்ந்து அதன் தொடர்ச்சியாக உருவாகும் ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் திரையரங்க வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி படத்தை வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. ஏனெனில், ஆகஸ்ட் 15 வியாழன் அன்று விடுமுறையைத் தொடர்ந்து திங்கட்கிழமை (ரக்க்ஷா பந்தன்) மற்றொரு விடுமுறையும் வருவதால் மக்களுக்கு எண்டர்டெயின்மெண்ட் கொடுத்து, படம் பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் செய்யும் என்கின்றனர் படக்குழுவினர்.
’டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் ப்ரீக்குவலை விட ஆக்ஷன் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் டபுளாக பார்வையாளர்களுக்கு இதில் இருக்கும். இயக்குநர் பூரி ஜெகன்நாத் மீண்டும் தனது ஹீரோவை சிறந்த ஸ்டைலான, மாஸ் மற்றும் அதிரடியான அவதாரத்தில் திரையில் காட்ட இருக்கிறார். ஹீரோ ராமும் இந்தக் கதாபாத்திரத்தைத் திரையில் சிறப்பாக கொடுத்துள்ளார். நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடித்திருக்க, ராமுக்கு ஜோடியாக காவ்யா தாப்பர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மணி ஷர்மா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு சாம் கே நாயுடு மற்றும் கியானி கியானெலி ஒளிப்பதிவு செய்துள்ளார்கள். இந்தப் படத்தை பூரி கனெக்ட்ஸ் பேனரில் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
’டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது. விரைவில் அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும்.
பிரபல நடிகர்கள் சமுத்திரக்கனி பரத் முதல் முறையாக இணையும் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சகோதரத்துவத்தையும் இதய உறவுகளையும் உறுதிப்படுத்தும் ஒரு அபூர்வ திரைப்படம் 'வீர வணக்கம்'...
காமெடி நடிகராக அறிமுகமாகி, கதையின் நாயகனாக நடித்து தேசிய விருது வென்ற நடிகர் அப்புக்குட்டி, தற்போது கதாநாயகனாக சில படங்களில் நடித்து வந்தாலும், தொடர்ந்து குணச்சித்திரம், வில்லன், காமெடி என பல கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்...
தமிழ் சினிமாவில் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என புதியவர்களின் வருகை வழக்கமானதாக இருந்தாலும், இதில் சிலர் தங்களது நடிப்பு மற்றும் திரைப்படங்கள் மூலம் எளிதில் கவனம் ஈர்த்து விடுவார்கள்...