Latest News :

குறுகிய நாட்களில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘மழை பிடிக்காத மனிதன்’ பாடல்!
Tuesday June-18 2024

விஜய் ஆண்டனியின் படங்கள் எப்போதுமே அழகான பாடல்களுக்காக ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன் வெளியான அவரது வரவிருக்கும் படமான 'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் முதல் சிங்கிள் டிராக் 'தீரா மழை'யும் ரசிகர்களைக் கவர்ந்த ஒன்றாக உள்ளது. இந்தப் பாடல் வெளியான குறுகிய காலத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. பெப்பி, ஃபாஸ்ட்-பீட், பவர் பேக்ட் பாடல்கள் இந்த காலத்தில் டிரெண்டிங் என்ற நிலையில், மெலோடியாக வெளிவந்திருக்கும் இந்தப் பாடல் இசை ஆர்வலகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

‘தீரா மழை’ பாடலை இந்தி படங்களில் பிரபல இசையமைப்பாளர் ராய் இசையமைத்து பாடியுள்ளார். வந்தனா மசான் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.  இந்த பாடலின் தெலுங்கு பதிப்பான ‘தூஃபன் லா’ ஏற்கனவே 200K+ பார்வைகளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தை விஜய் மில்டன் எழுதி, ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸின் கமல் போஹ்ரா, டி லலிதா, பி. பிரதீப் மற்றும் பங்கஜ் போஹ்ரா ஆகியோர் தயாரித்துள்ளனர்.

 

படத்தில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், மேகா ஆகாஷ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, சரண்யா பொன்வண்ணா, ப்ருத்வி அம்பர், தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் மற்ற இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, அச்சு ராஜாமணி, வாகு மசான் மற்றும் ஹரி டஃபுசியா. படத்தொகுப்பு பிரவீன் கே.எல். செய்துள்ளார்.

Related News

9834

”இந்த அளவிற்கு கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை” - ‘லப்பர் பந்து’ வெற்றி குறித்து ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி பேச்சு
Thursday September-26 2024

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

இந்தியில் வெற்றி பெற்ற ‘கியாரா கியாரா’ இணையத் தொடர் தமிழ் மற்றும் தெலுங்கிலும் ஒளிபரப்பாகிறது!
Thursday September-26 2024

ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,  செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின்  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் சீசன் 8’! - அக்டோபர 6 ஆம் தேதி ஒளிபரப்பாகிறது
Thursday September-26 2024

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான  விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...

Recent Gallery