Latest News :

‘மட்கா’ படத்திற்காக ரூ.15 கோடியில் உருவாக்கப்பட்ட பழமையான வைஸாக் நகரம்!
Friday June-28 2024

கருணா குமர் இயக்கத்தில், வருண் தேஜ் நடிப்பில் உருவாகும் பிரமாண்டமான பான் இந்தியா திரைப்படம் ‘மட்கா’. இதில் நாயகிகளாக நேரா ஃபதேஹி, மீனாட்சி சௌத்ரி ஆகியோர் நடிக்க, நவீன் சந்திரா, கன்னட கிஷோர், அஜய் கோஷ், மைம் கோபி, ரூபாலட்சுமி, விஜய்ராம ராஜு, ஜெகதீஷ், ராஜ் திரந்தாஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

 

வைரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் எஸ்.ஆர்.டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் மோகன் செருகுரி மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி டீகலா இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். பிரியசேத் ஒளிப்பதிவு செய்ய, கார்த்திகா ஸ்ரீனிவாஸ்.ஆர் படத்தொகுப்பு செய்கிறார். சுரேஷ் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். 

 

தற்போது இப்படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 35 நாட்கள் நடக்க கூடிய இந்த மூன்றாவது கட்ட படப்பிடிப்பிற்காக மட்டும் 15 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. ராமோஜி ஃபிலிம் சிட்டியில் (RFC) விண்டேஜ் வைஸாக் நகர அமைப்பை,  தயாரிப்புக் குழு உருவாக்கியுள்ளது. இது பிரம்மாண்டத்துடன் கூடிய பழைய வைஸாக் நகருக்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் புதுமையான அனுபவமாக இருக்கும். 

 

'மட்கா' மிகப்பெரும் பட்ஜெட்டில் பான்-இந்திய படமாக உருவாக்கப்படுகிறது. விண்டேஜ் லுக்கை கொண்டு வர, பிரம்மாண்ட செட் அமைப்பது, ரசிகர்களுக்கு கண்கவர் அனுபவத்தை வழங்குவதற்கான படக்குழுவினரின் அர்ப்பணிப்பை காட்டுகிறது. கடந்த காலத்திலிருந்த வைஸாக்கின் வசீகரத்தையும் அதன் அமைப்பையும்  பிரதிபலிக்கும் வகையில், மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட செட், படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக இருக்கும். மேக்கிங் வீடியோ படத்தின் முன் தயாரிப்பு மற்றும் பிரம்மாண்டமான படப்பிடிப்பு என படத்தின் மீது ஆர்வத்தை கூட்டுகிறது. 

 

பன்முக நடிப்புக்கு பெயர் பெற்ற வருண் தேஜ், 'மட்கா' படத்தில் வித்தியாசமான மற்றொரு கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்க உள்ளார். அவரது பாத்திரம் படத்தில் முக்கியமானது, மேலும் அவரது கதாப்பாத்திரத்தின் தாக்கம், நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் பெரிய அளவில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

தேசத்தையே உலுக்கிய உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து பிரம்மாண்டமான திரைக்கதை, அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு, உன்னிப்பாக வடிவமைக்கப்பட்ட செட் ஆகியவை பார்வையாளர்களை ஈர்க்கும் என்று

படக்குழுவினர் நம்புகிறார்கள். அவர்களின் நோக்கம் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவின் வரலாற்றில் தனித்து நிற்கும் ஒரு மறக்கமுடியாத சினிமா அனுபவத்தை உருவாக்குவதாகும்.

 

வருண் தேஜின் திரை பயணத்தில் ஒரு மைல்கல் படமாக அமைய இருக்கும் ‘மட்கா’ தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியப் படமாக வெளியாகவுள்ளது.

Related News

9853

இயக்குநர் விஷ்ணு வர்தனுக்காக பங்கேற்ற நயன்தாரா! - நன்றி தெரிவித்த ‘நேசிப்பாயா’ நாயகன்
Saturday June-29 2024

மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி, இயக்குநர் விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நாயகனாக அறிமுகமாகிறார்...

’இந்தியன் 2’ படத்திற்காக லைகா நிறுவனம் மேற்கொள்ளும் பிரமாண்ட விளம்பர பணிகள்!
Friday June-28 2024

கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் விளம்பர பணிகளை லைகா நிருவனம் மிக பிரமாண்டமான முறையில் செய்து வருகிறது...

’கொட்டேஷன் கேங்’ படம் சன்னி லியோன் மீதான உங்கள் பார்வையை மாற்றிவிடும் - நடிகை பிரியாமணி நம்பிக்கை
Friday June-28 2024

ஜாக்கி ஷெராப், பிரியாமணி, சன்னி லியோன் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘கொட்டேஷன் கேங்’...