கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் இணைந்து தயாரித்திருக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல் பாகமான ‘இந்தியன்’ தமிழக பிரச்சனைகளை பேசிய நிலையில், ‘இந்தியன் 2’ தேசிய அளவிலான பல பிரச்சனைகள் பற்றி பேசியிருப்பதால் படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலர் படத்தின் மீதான் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருப்பதோடு, கமல்ஹாசன், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் பத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்காக சிறகு இல்லாத குறையாக இந்தியாவில் மட்டும் இன்றி பல்வேறு வெளிநாடுகளுக்கும் பறந்துக்கொண்டிருப்பதால் எங்கு பார்த்தாலும், எந்த பக்கம் திரும்பினாலும் ‘இந்தியன் 2’ மட்டுமே பளிச்சிடுகிறது.
வரும் ஜூலை 12 ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள ‘இந்தியன் 2’ படத்தின் புரோமோஷன் பணிகளில் படு தீவிரமாக இறங்கியிருக்கும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், இதுவரை யாரும் செய்திராத பல யுக்திகளை ககையாண்டு வருகிறது. அந்த வகையில், துபாயில் ஸ்கை டைவிங் மூலமாகவும் படத்தை விளம்பரப்படுத்தி வருகிறது. சுமார் 40 ஆயிரம் அடி உயரத்தில் ஸ்கை டவிங் வீரர்கள் பறந்தபடியே தங்களுடன் ‘இந்தியன் 2’ விளம்பரத்தையும் பறக்கவிட்டு, பார்வையாளர்களை பரவசப்படுத்துகிறார்கள்.
பூமியில் மட்டும் அல்ல ஆகாயத்திலும் ‘இந்தியன் 2’ தான் என்ற லைகா புரொடக்ஷன் நிறுவனத்தின் விளம்பர யுக்தி ரசிகர்களை வியக்க வைத்தது போல், படமும் நிச்சயம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் விதத்தில் இருக்கும் என்பது தெரிகிறது.
பிரபல நடிகர்கள் சமுத்திரக்கனி பரத் முதல் முறையாக இணையும் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சகோதரத்துவத்தையும் இதய உறவுகளையும் உறுதிப்படுத்தும் ஒரு அபூர்வ திரைப்படம் 'வீர வணக்கம்'...
காமெடி நடிகராக அறிமுகமாகி, கதையின் நாயகனாக நடித்து தேசிய விருது வென்ற நடிகர் அப்புக்குட்டி, தற்போது கதாநாயகனாக சில படங்களில் நடித்து வந்தாலும், தொடர்ந்து குணச்சித்திரம், வில்லன், காமெடி என பல கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்...
தமிழ் சினிமாவில் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என புதியவர்களின் வருகை வழக்கமானதாக இருந்தாலும், இதில் சிலர் தங்களது நடிப்பு மற்றும் திரைப்படங்கள் மூலம் எளிதில் கவனம் ஈர்த்து விடுவார்கள்...