1980 களின் பிற்பகுதியிலிருந்து 1990 களின் முற்பகுதி வரை ஒரு வங்கி காசாளரின் அசாதாரண வாழ்க்கையை விவரிக்கும் திரைப்படமாக உருவாகியிருக்கிறது ‘லக்கி பாஸ்கர்’. வெங்கி அட்லூரி எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் துல்கர் சல்மான் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக மீனாட்சி செளத்ரி நடித்திருக்கிறார்.
சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் செளஜன்யா இணைந்து தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இபப்டத்தை ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் வழங்குகிறது.
தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, வரும் செப்டம்பர் 7 அம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
80-களில் மும்பையை (அப்போது பம்பாய் என்று அழைக்கப்பட்டது) ஹைதராபாத்தில் சில விலையுயர்ந்த மற்றும் விரிவான செட்களுடன் மீண்டும் உருவாக்கியுள்ளனர். இந்தக் கதை நடக்கும் காலக்கட்டத்தை ஒத்த வங்கிகளை மிகப் பிரம்மாண்டமாக படக்குழு உருவாக்கியுள்ளது.
பெரிய அளவில் தரமான உள்ளடக்கத்தை வழங்க வேண்டும் என்ற ஆர்வத்திற்கு பெயர் பெற்ற தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் 'லக்கி பாஸ்கர்' படத்திற்கும் பிரமாண்டமான செட்களை உருவாக்கத் தயங்கவில்லை. 'லக்கி பாஸ்க'ரின் வாழ்க்கை காலக்கட்டத்திற்கு பார்வையாளர்கள் நிச்சயம் கொண்டு செல்லப்படுவார்கள் எனத் தயாரிப்பாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
தயாரிப்பு வடிவமைப்பாளர் வங்காளன் செட்டுகளுக்கு நம்பகத்தன்மையைக் கொண்டு வர விரிவாக ஆராய்ச்சி செய்து தனது மேம்படுத்தப்பட்ட அனுபவத்தினால் சிறந்த கலைப்படைப்பைக் கொடுத்துள்ளார். பிரபல ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி, லக்கி பாஸ்கரின் பயணத்தை வசீகரிக்கும் பாணியில் படம்பிடித்துள்ளார்.
தமிழ் திரைப்படம் MAX-இன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ட்ரெய்லர் மற்றும் பாடல்களுடைய முன்னோட்டம் இன்று பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது...
டாக்டர். ஐசரி கே. கணேஷ் அவர்களால் துவங்கப்பட்ட, தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், அனீஷ் அர்ஜுன் தேவ் அவர்களின் வாமிண்டியா நிறுவனத்துடன் இணைந்து, தயாரிக்கப்பட்ட திரைப்படம் ’அகத்தியா’...
Coke Studio Tamil has wrapped up its remarkable Season 2, leaving a lasting impact by celebrating Tamil music and culture with a stellar lineup of artists...